Pages

Friday, January 6, 2012

கோமாளி செல்வா - என் நகைச்சுவை முயற்சி

இந்தியாவும் பாகிஸ்தானும் இப்படி பிரிந்து கிடைக்கிறதே என்று செல்வாவுக்கு வருத்தம். யார் இந்த செல்வா என்று பார்த்தால், இவர் ஒரு வலைப்பதிவர். அடிக்கடி மொக்கையும், கதைகளும் எழுதுவார் பதிவுலகமே இவரைக் கண்டு பயப்படும் அளவுக்கு. கொஞ்ச நாள் முன்னாடி மூடப்பட்ட பஸ்(Buzz) கூட இவரால் தான் என்று நம்பப்படுகிறது. ஆனா பாவம் இவர்க்கு இது எதுமே தெரியாது. 

சரி இப்போ இந்தியா, பாகிஸ்தான் மேட்டர்க்கு வருவோம். எப்போ பார்த்தாலும் குண்டு வைக்கிறாங்க, சண்டை போடுறாங்களேனு இவர்க்கு வருத்தம். தான் மட்டும் இந்தியா சுதந்திரம் பெறும் முன்பு பிறந்திருந்தால் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டு இருக்க மாட்டேன் என்று மனத்துக்குள் அடிக்கடி சொல்லி கொள்வார். அப்படித்தான் ஒரு நாள் நினைத்தவர், ஏன் இதை நம் நாட்டின் முக்கிய தலைவர்களிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தார். அப்படியே கிளம்பினார் சென்னைக்கு.

முதலில் சந்தித்தது முதல்வர் ஜெயலலிதாவை.

செல்வா: அம்மா வணக்கம். 


ஜெ: வாங்க எப்படி நீங்க உள்ள வந்தீங்க? கேட் பூட்டி இருக்குமே. 

செல்வா: வாட்ச்மேன் கிட்ட நான் புதுசா பதவி ஏத்து இருக்கிற அமைச்சர்னு சொன்னேன் விட்டுட்டார். 


 ஜெ: ஆமா நீங்க எந்த துறை?  எவ்ளோ மணி நேரமா அமைச்சரா இருக்கீங்க? கமான் க்விக், உங்க மூஞ்சி எனக்கு பிடிக்கல, மாத்தணும். 


செல்வா:அம்மா நான் அமைச்சர்லாம் இல்ல, இந்தியா,பாகிஸ்தான் ரெண்டையும் சேர்த்து வைக்கணும், அதுக்காக உங்ககிட்ட பேச வந்தேன்.  

ஜெ: எப்போ பிரிச்சாங்க? கருணாநிதி ஆட்சில தானே? சொல்லுங்க சட்டமன்றத்துல ஒரு தீர்மானம் போட்டுடுவோம். 

 இதுக்கு மேல இருந்தா பைத்தியம் பிடித்திடும் என்று அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.வேற யார்கிட்ட போலாம் என்று யோசித்தவர், எதிரே சுவரில் போஸ்டர் ஒன்றில் மாடு கூட திங்காத கருணாநிதி படத்தை பார்த்தவர் சரி இவரிடம் பேசலாம் என்று அவர் வீட்டுக்கு சென்றார்.

கருணாநிதி: வாங்க தம்பி. உங்கள் பெயர் என்ன? எந்த ஊர்? 


செல்வா : வணக்கம் ஐயா, என் பெயர் செல்வா, ஊர் கோபி. 


கருணா: அடடே தம்பி மூன்றெழுத்து, செல்வா மூன்றெழுத்து, கோபி, ......... சரி விடுங்க அது ரெண்டு எழுத்துதான் போல. என்ன விஷயம்? 


செல்வா : அது வந்து ஐயா,  இந்தியால இருந்து பாகிஸ்தானை பிரிச்சுட்டாங்க இல்லையா? அதை சேர்த்தால் இந்தியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அல்லவா? அதனால சேர்க்க வேண்டும்னு சொல்லி உங்ககிட்ட பேச வந்தேன். 


கருணா : ஆமாம் தம்பி, 1947 இல் இந்தியா இரண்டாக பிரிந்த போதே, அதை எதிர்த்து அறிக்கை விட்டவன் நான். (பேப்பரை எடுத்து காட்டுகிறார்). 


செல்வா : அதான் ஐயா உங்ககிட்ட சொல்லி எப்படியாவது ரெண்டு நாட்டையும் சேர்த்து வைக்கலாம்னு வந்தேன். 


கருணா : அப்படியா? அங்க தமிழர்கள் இருந்தா சோனியாஜி கிட்ட சொல்லி ஏதாவது பண்ணலாம். விடுங்க நாளைக்கு பாகிஸ்தான் பிரதமர்க்கு ஒரு கடிதம் அனுப்பிடலாம். அப்படியே கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஒரு ஜெராக்ஸ் அனுப்பிடலாம். 


இந்த பல்பு ப்யூஸ்போயி பல வருடம் ஆச்சு என்று அப்போது தான் உணர்ந்தார் செல்வா. அப்படியே நன்றி கூறி விடை பெற்றார். 

கருணா : சரிங்க தம்பி, போகும் போது, அப்படியே முரசொலிக்கு ஒரு வருட சந்தா கட்டிட்டு போயிடுங்க. இல்லாட்டி கேட் திறக்க மாட்டாங்க. 

வந்ததுக்கு தண்டசெலவு என்று நினைத்தவர். பணம் கட்டிவிட்டு வெளியே வந்தார். சரி நாம தமிழக காங்கிரஸ் தலைவர்கிட்ட இது பத்தி பேசுவோம் என்று சத்தியமூர்த்தி பவன் வந்தார்.

 அங்கே வாசலில் கோவில்  பொங்கல் சாப்பிட்டவர் போல ஒருவர் உடக்கார்ந்திருக்க, அவரிடம் "ஏங்க காங்கிரஸ் தலைவர் எங்க இருக்கார் ?" அவர் "தம்பி நான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர்" என்று சொன்னார். இடையில் ஒரு செருப்பு எங்கிருந்தோ பறந்து வந்து அவர் மீது விழுந்தது.  உள்ளே எட்டிப்பார்த்த செல்வா, அங்கே மல்யுத்தமே நடப்பதைக் கண்டு பயந்து போனார். அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்.

சரி இங்கே எல்லாம் சரிப்படாது என்று டெல்லிக்கு போவோம் அங்கே நம்ம மன்மோகனை சந்திப்போம் என்று அவர் வீட்டுக்குப் போனார்.

வீட்டில் அவரது மனைவி மைதா மாவு பசையை மன்மோகன் வாயில் தடவிக் கொண்டிருக்க

செல்வா : வணக்கம் பிரதமர்ஜி


மன்மோகன் சுற்றும் முற்றும் திரும்பி பார்க்கிறார். உடனே அவரது மனைவி, அட உங்களைத்தான் சொல்றார் என்க மன்மோகன் கண்ணில் நீர் வழிகிறது. 


மன்மோகன் மனைவி : இப்படி சொன்னாலே இவர் அழுதுடுவார். இவர்தான் பிரதமர்னு இவருக்கே தெரியல தம்பி. (சேலைத்தலைப்பில் கண்ணீரைத் துடைக்கிறார்)

இங்கிருந்தால் வேலை நடக்காது என்று புரிந்த செல்வா, சரி சோனியாஜி தான் ஒரே தீர்வு என்று அவரை பார்க்க கிளம்பினார்.

செல்வா : வணக்கம் சோனியா மேடம்

சோனியா : வணக்கம். என்ன விசயம் ?

செல்வா விசயத்தை சொல்லி முடிக்கவும். யோசிக்கிறார் சோனியா.

சோனியா : அவிங்க பொதுமக்களை தானே கொல்லுறாங்க, நாங்க பண்ண வேண்டியத அவிங்களே பண்றாங்க? தம்பி நீங்க கிளம்பலாம்.

ராகுல் : மம்மி மம்மி அடுத்து அஞ்சு மாசத் தேர்தல் வருதே, நான் போகட்டா?

சோனியா : காங்கிரசை ஒழிக்க நீ போதும் ராசா. போ போ

செல்வா (மனத்துக்குள்) : அதைத் தான் நாங்களும் பண்ணனும்.

வெளிறிய முகத்தோடு அடுத்து பாகிஸ்தான் பிரதமரை பார்க்கலாமா என்று யோசிக்கிறார்.
------

பின்குறிப்பு : 

இந்தக் கதையில் நகைச்சுவையே இல்லையே என்பவர்களுக்கு ஒரு நகைச்சுவை 

"நகைச்சுவை" (செல்வா எபக்ட்)9 comments:

  1. அட பாவி! அரசியல் பக்கமே தலை வச்சுப் படுக்காத என்னைய ஏன் ஏன் ஏன் இப்படி கொல்ற ?

    எத்தன நாளா பிளான் பண்ணின :)))

    ReplyDelete
  2. அடங்கொன்னியா......... செல்வாவாலயே இவங்களை சமாளிக்க முடியலையா?

    ReplyDelete
  3. பலே பிரபு பலே...........,

    ReplyDelete
  4. பலே பலே....
    வாழ்த்துக்கள் :)))))))))

    ReplyDelete
  5. "Comment"

    இதுவும் செல்வா Effect

    ReplyDelete
  6. Nalla muyarchchi. Neengalum Thuglakkum ondru, edhu arabiththalum nandraga nadakkum.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு அரசியலை தம்பி நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க

    ReplyDelete
  8. இடையில் ஒரு செருப்பு எங்கிருந்தோ பறந்து வந்து அவர் மீது விழுந்தது.//

    ஹா ஹா ஹா ஹா டைமிங் காமெடி, நல்லவேளை செல்வா மேல விழலை விழுந்துருந்தா செருப்பை எரிஞ்சவனை கூப்பிட்டு மொக்கை போட்டே தற்கொலை பண்ணவச்சிருப்பான் ஹி ஹி...

    ReplyDelete
  9. எலேய்... இன்னொரு செல்வா கெளம்பிட்டான் டோய்
    ஓடு.. ஓடு.. வேகமா ஓடு..

    ReplyDelete