Facebook, Twitter, Buzz, & My Gmail Status. போன்றவற்றில் பகிர்ந்த காதல் பற்றிய பகிர்வுகள்.
இவை எல்லாம் கவிதையா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வேன்.
- இல்லாததை சொல்லிச் சொல்லி உன்னை வர்ணித்து இருப்பவை எல்லாம் சண்டையிடுகின்றன நீயாய் இருக்க..
- ஒரு வார்த்தையில் கவிதை கேட்டாள் நீ என்றேன், பொய் என்றாள்; நான் என்றேன், அய் என்றாள்; நாம் என்றேன், மெய் என்றாள்!
- சிலருக்கு உன்னைப் பிடிக்கும்; சிலருக்கு உன்னையும் பிடிக்கும்; எனக்கு உன்னை மட்டுமே பிடிக்கும். !
- என்னை போன்ற பெண்களை பார்த்தால் என்ன செய்வாய் என்று கேட்டாள், கண்ணாடி இல்லாவிட்டால் நீயென் நினைவில், இருந்தால் உன் தங்கை என்றேன் !! ச்சீ போடா என்றாள் !! # டபுள் டமாக்கா
- என்னைக் கேட்டுதான் எல்லாம் சொல்வேன் என்றாள். யாரைக் கேட்டுச் சொன்னாள், என்னைப் பிடிக்காதென?
- கனவில் கூட உன்னைப் பிரிய விரும்பவில்லை...... அதனால்தானோ கனவில் மட்டுமே நீ என்னுடன்.
- நீ வந்தவுடன் உன்னுடன் பேசுகிறேன். நீ வரும்முன் நம்முடன் பேசினேன்.
- உன் புரிதலுக்காகவே என் கவிதைகள்... ஆனால் உன்னைத் தவிர அனைவருக்கும் புரிகிறது.
- அவ்வப்போது கொஞ்சம் சிரி. என் ஆயுள் வளர.
- நீ வரும் வரை பூமிக்கு நிலவொளி, நீ வந்த உடன் நிலவுக்கு நீ தான் ஒளி
- சில அழகான கவிதைகளை இன்னும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. உன்னையும் சேர்த்துதான்.
- எவ்வளவு காதலிக்கிறாய் என்றாள், கன்னத்தில் கொடுத்தேன் முத்தம். இவ்வளவுதான் காதலிக்கிறாயா என்கிறாள்!
- ஒரே காதல் தான் உனக்கு தென்றலாகவும், எனக்கு புயலாகவும். முடிவில் நீ சிரித்திருக்கிறாய், நான் சிதைந்திருக்கிறேன்.
- யாருக்கு உன் கவிதைகள் என கேள்விகள் நிறைய. காதலி(க்க) தெரிந்திருந்தால் காதலித்து இருப்பேனே? தெரியாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.