மாபெரும் நகரத்தில்
கால்கள் வலிக்க
அலைந்த பின்னும்
கழிப்பறை எதுவும்
இல்லாத வேளைதனில்,
ரோட்டோரத்தில்
கழிப்பதை தவிர
வேறென்ன செய்வான்
இந்த ஈனத் தமிழன்!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
இலவசங்கள் எல்லாம்
இளித்து பெறும்
எந்த தமிழனும்
பயன்படுத்தவில்லை,
பேருந்து நிலையங்களின்
இலவச கழிப்பிடத்தை!!!
வெளியில் கழிப்பதையே
ஐந்தாம் வேதமென
கொண்டுவிட்டான்!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
_கி.பி
Wednesday, December 29, 2010
Tuesday, December 14, 2010
சில வரிகளில் !!!!!!!
எந்த பூச்சிக் கொல்லி மருந்துகளும்
சரியான விலைக்கு விற்கப்படுவதில்லை
பெப்சி, கோக்கும் சேர்த்துதான்!!
----------------------------------------------------------------------------------------------------------------------------
பேருந்துப் பயணியாய்- நீ
பாதசாரியாய் நான்
பயணச்சீட்டாய்
நம் காதல்!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவை பகலாக்கும்
அந்த மேடையிலே,
மின்சாரத் துறை அமைச்சர்
முழங்குகிறார்,
"மின்சாரத்தை சிக்கனமாய்
பயன்படுத்தினால்தான்
இங்கு இருக்காது
மின்சாரத் துண்டிப்பு!!"

Wednesday, December 8, 2010
கிராமம்
எங்கும் பசுமை தெறிக்க
விளைந்த நெற்கள்
தலைகுனிந்து நிற்க ,
தளராமல் நடக்கும்
முதியவரும்,
தடங்கலின்றி பாயும்
நீரும்,
தாவி ஓடும்
ஆடும், மாடும்
அடையாளமாம் கிராமத்திற்கு!!!
காணவில்லை அடையாளத்தை
ஆடும்,மாடும்
ஓடிய இடம்
அடுக்கு மாடிகளாகவும்!
இயற்கையாய் சிரித்த பசுமை
செயற்கையாய் தொட்டிகளிலும்!
முதியவர்கள் நடப்பதே இல்லை!
முதிர்ந்த போது யாரும் உயிருடன் இல்லை!
தவிக்கிறது எனது மனம்!
சிரிக்கிறது இந்த உலகம்
பிற்போக்குவாதி நான்
என்று!!
_ கி.பி
விளைந்த நெற்கள்
தலைகுனிந்து நிற்க ,
தளராமல் நடக்கும்
முதியவரும்,
தடங்கலின்றி பாயும்
நீரும்,
தாவி ஓடும்
ஆடும், மாடும்
அடையாளமாம் கிராமத்திற்கு!!!
காணவில்லை அடையாளத்தை
ஆடும்,மாடும்
ஓடிய இடம்
அடுக்கு மாடிகளாகவும்!
இயற்கையாய் சிரித்த பசுமை
செயற்கையாய் தொட்டிகளிலும்!
முதியவர்கள் நடப்பதே இல்லை!
முதிர்ந்த போது யாரும் உயிருடன் இல்லை!
தவிக்கிறது எனது மனம்!
சிரிக்கிறது இந்த உலகம்
பிற்போக்குவாதி நான்
என்று!!
_ கி.பி
Subscribe to:
Posts (Atom)