எப்போதும்
சில குழந்தைகள்
எழுத்துக்களில் பிழை
செய்கின்றனர் !
சில பெற்றோர்
எண்ணங்களில் பிழை
செய்கின்றனர் !
------------------------------------------------------------------
அப்போது
எட்டு மணி வரை
ஆடி,ஓடி விளையாடி
உடலில் அடிபட்டு
உறங்கின குழந்தைகள் !!!
இப்போது
எட்டு மணிக்கு
வீட்டுக்கு வரும்
பெற்றோரால்
உள்ளத்தில் அடிபட்டு
உறங்கவில்லை குழந்தைகள்!!!!
------------------------------------------------------------------
ஆயிரம் ரூபாய்க்கு
பொம்மை,
கூட ஐநூறு போட்டு
ஆடைகள்,
எட்டாயிரம் போட்டு
எடுப்பான நகைகள்,
விளையாட கணினி,
விருப்பமில்லா நடனம்!
என எல்லாமே
விலைக்கு கிடைக்கிறது
இன்றைய குழந்தைக்கு!!
விலையில்லா
அன்பைத் தவிர
-கி.பி
நன்றி
"கவிதை என்பது" வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த நண்பர் philosophy prabhakaran அவர்களுக்கு பலே பிரபு என்கிற கி.பி மற்றும் யோகா ஆகிய இருவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கவனிக்க இங்கு கி.பி(கி.பிரபு) மற்றும் பலே பிரபு ஆகிய இரண்டும் நானே.