Pages

Wednesday, December 28, 2011

தமிழ்ப் படம்மும்பை நடிகையுடன் 
ஜெர்மனியில் டூயட் ,
கேரள நண்பனுடன் 
பெங்களூரில் கொண்டாட்டம் ,
டெல்லி வில்லனை 
உலக மக்களை காக்க ,
கொல்கத்தாவில் கொன்றதில் 
தமிழன் செத்தே போனான் .


இ(செ)யற்கை

காடுகளை அழித்த 
நகரத்தில் பார்க் !

அருவி இருந்த இடத்தில் 
தீம் பார்க் !

ஆறு இருந்த இடத்தில் 
 சாக்கடை !

மரங்களை வெட்டி 
மலர்ந்த வீட்டில் 
சீனரி ஓவியம் !

நடக்க முடிகிற இடத்துக்கும் 
நான்கு சக்கர வாகனம் !

நேரில் பேசக் கூடிய 
தொலைவுக்கும் அலைபேசி 

இருப்பதை எல்லாம் 
அழித்து விட்டு 
உருவானது செயற்கை !

இருந்த இடமே தெரியாமல் 
அழித்து விட்டு 
உருவாகும் இயற்கை !

Friday, December 23, 2011

அது இது எது - 04


 016

பாட்டியிடம் ஆசீர்வாதம் 
வாங்கிக்கோ - பையனிடம் 
பையன் சொன்னான் 
நல்லா இரு பாட்டி 

017

 குடி குடியை 
கெடுக்கும் என்றேன் 
அதனாலதான் டைவர்ஸ் 
பண்ணிட்டேன் ஸார்
எதிர்த்த டேபிள்காரன்

018

நாற்காலிக்கு மதிப்பிருந்தால் 
நண்பனும், துரோகி 
ஆகிறான்

019

வீட்டில் பிரச்சினை 
என்றாலும் மன்மோகன்
வெளிநாட்டுக்குதான்

020 

ஃபேர்& லவ்லி போட்டால் 
பாட்டு வரும் ,
விவல் போட்டால் 
பட்டம் வரும் 
புத்திசாலிகளின் புது 
முயற்சி

021 

பத்துக் கிருமிகளினால்
தொல்லையில்லை 
பதினோராவது கிருமி போல 
காலையில் இருந்து
காய்ச்சல் சளி.
022

"பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல் 
வாய்ப்பூசு கைகழுவு "
சாட்டிலைட் தொலைக்காட்சி 
சட்னி,இட்லியுடன் 
பொங்கல்

023
"2041 இல் நான் 
முதல்வரானால் "
பள்ளிக் கட்டுரையில்  
அரசியல்வாதி மகன் 
024
"பள்ளிக் குழந்தைகளுக்கு 
காலை உணவு"
அரசு ஊட்டிவிடும் !
"புதிய எலைட் 
பார்கள் திறப்பு"
அரசு ஊற்றியும் கொடுக்கும் !!

025

மூணு புள்ளி ...
ஒரு ஆச்சர்யகுறி !
முடிந்தது கவிதை ...!

Friday, December 16, 2011

அது இது எது - 03

09

இன்னும் தூங்கலியா?
தூங்காத அம்மாவின்
கேள்வி

---

10

நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
---
11

உரம் போட்டு போட்டு 
பயிர் விளைந்தது 
நிலம் அழிந்தது. 

--

12
கெமிஸ்ட்ரி புக்கில்
மானாட மயிலாட 
சேர்க்காமல் விட்டது 
கலைஞரின் மறதி !

 ---
13

 தாத்தா செத்த பின் 
திண்ணையும் செத்தது 
---
14

எழவுக்கோ தேவைக்கோ 
போகாமல் விட்டால் 
செத்தவனைத் தவிர 
மற்றவன் பேசுவதில்லை

---

15

சத்தியமா சொல்றேன்...
பெரும்பாலான பொய்களின்
தொடக்கம்

Thursday, December 15, 2011

அது இது எது - 02

3.

இல்லை என்பவர்களின்
கண்ணில் தெரிகிறது
இருக்கிறது என்ற பதில்

---
4.

செத்துப் போனவன்
கண்ணில் இன்னும்
சாகாத ஆசைகள்

---
5.

நாளை முடிக்க
வேண்டியது
நாளை மறுநாள்
நேற்றாகிவிடும்

---
6.

இணையத்தால் இழந்தது
பக்கத்து வீட்டுக்காரர்களை

---
7.

கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
வேற்றுமையில் ஒற்றுமை
எல்லோருக்குள்ளும்
சண்டை

---
8.

ஆறு மாசத்துக்கு
ஒரு முறை
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்.
அடிக்கடி இருக்கிறாள்
அம்மா

---

Tuesday, December 13, 2011

அது இது எது - 01

1.

செய்த தவறுகளுக்கு
ஒவ்வொரு உறுப்பையும் 
சிதைக்கப் போகிறோம் 
.
.
பிறப்புறுப்பை மட்டும் வேண்டாமே
அடுத்த தவறு செய்ய வேண்டும் 

-----
2.

ஒவ்வொரு தவறுக்கும்
ஒரு உறுப்பை
எடுத்தனர் 
ஒன்றுவிடாமல் எடுத்தபின் 
ஒவ்வொன்றாய் 
எட்டிப் பார்க்கின்றன
மிச்ச தவறுகள் 


Monday, December 5, 2011

குடிமகன்


வயிறு முட்டக் குடிப்பவன்
வாழைப் பழம் 
இரண்டு ரூபாய் என்றால்
இருபது நிமிடம் 
பேரம் பேசுகிறான்.

Sunday, December 4, 2011

அர்த்தம்

தெருவில் கிடக்கும் 
குடிக்காரனைத் திட்டிவிட்டு
குப்பையை அருகில் 
கொட்டிச் சென்றால்,
இந்த சமுதாயத்தின் 
மேலுனக்கு அக்கறை
என்று அர்த்தம்.

சாலையில் அடிபட்டு 
சாகக் கிடக்கும் 
முதியவரைப் பார்த்து 
"ச்சச்சோ" என்றால்,
நீ இரக்கமுள்ளவன்
என்று அர்த்தம்.

நடிகையின் மார்பை
நன்றாய் காட்டிவிட்டு 
ரசிகனின் பார்வையில் 
தவறென்று சொன்னால்,
நீ கலைஞன் 
என்று அர்த்தம்.