Pages

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா? வில்லனா?


விஸ்வரூபம் படம் பார்ப்பதே விஸ்வரூபமாகிவிட்ட நிலையில் இங்கே ரிலீஸ் ஆன முதல் இரண்டாம் காட்சி தான் பார்க்க முடிந்தது. போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் தான் தியேட்டரில் நுழைந்தேன். படத்தின் இடையில் போலீஸ் வந்த போது எங்கே படம் பாதியில் நிறுத்தப்பட்டு விடுமோ என்று கூட எண்ணினேன், ஆனால் எப்படியோ படத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. 

பேஸ்புக்கில் இதை ''அமெரிக்க கிறிஸ்துவர்களை கொல்ல முயற்சிக்கும் ஆப்கன் முஸ்லீம் சதியை இந்தியாவின் முஸ்லீம் முறியடிக்கும் கதை." என்று சொல்லி இருந்தேன். இதில்  ஆப்கன் முஸ்லீம் என்பது அல்-கொய்தா தீவிரவாதிகள்.படம் பாதிக்கும் மேல் இவர்கள் தாய்நாடான ஆப்கனில் தான் நடக்கிறது. 

ஆப்கனுக்கே சென்று வந்த ஒரு உணர்வை நமக்கு தருவது போல் இருக்கிறது படத்தின் காட்சியமைப்புகள். சில நொடிகள் வரும் சிறுவர்கள் முதல், படம் நெடுக வரும் கமல், ராகுல் போஸ், ஜெய்தீப் என ஒவ்வொருவரின் நடிப்பும் அருமை.  அங்கிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு தாவும் போது கதை முழுக்க கமல் முதுகில். இதை இயக்குனர் கமல் உதவியுடன் நடிகர் கமல் மிக அற்புதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். 

கிளைமாக்ஸ் கொஞ்சம் மெதுவாக இருப்பதாக தோன்றினாலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் நாம் பார்க்கும் உணர்வை தான் படத்தில் இருப்பவர்களும் செய்கிறார்கள், ஆம் தீவிரவாதிகள் ஒன்றும் உள்ளூர் தாதாக்கள் இல்லை அல்லவா கத்தி கூப்பாடு போட. 

படத்தின் ஒவ்வொரு விசயமும் மிக கவனமாக கையாளப்பட்டுள்ளன. இசையை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் வரும் "உன்னை காணாது நான்" என்ற ஒரு பாடல் மற்றும் ஆப்கனில் நடக்கும் காட்சிகளில் வரும் பின்னணி இசை ஆகியவை சாம்பிள். 

கேமரா, இவ்வளவு புதியதாக காட்சியமைப்புகள் இதுவரை பார்த்தே இருக்க முடியாது நாம். மிக அற்புதமாக கையாண்டுள்ளார் சனு வர்கீஸ். அடுத்து கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஆப்கன் தீவிரவாதிகள் இடங்களாக காட்டப்படுபவற்றை மிக அற்புதமாக அமைத்துள்ளார். 

எடிட்டிங், ஒரே ஒரு காட்சி போதும் மகேஷ் நாராயணன் திறமைக்கு, கமல் தன்னையும் மனைவியையும் பிடித்து வைத்திருப்பவர்களை அடித்து வீழ்த்தும் இடம். மிக அற்புதாக வெட்டி, ஒட்டி இருக்கிறார் படம் முழுக்க.

இனி தடை பற்றி பார்ப்போம். படத்திற்கு தடை வேண்டும் என்பவர்கள் சொல்லும் கருத்துகள் கொல்பவன் குரானை படித்து விட்டு கொல்கிறான், பிரார்த்தனை செய்து விட்டு கொல்கிறான், தீவிரவாதிகளுக்கு தமிழகம் புகலிடம் என்று உள்ளது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது படம் முழுக்க முழுக்க தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதத்தை பற்றியது. இவர்கள் என்ன முஸ்லீம்களில் நாத்திகர்களா? இல்லை தாங்கள் கொலை செய்யும் போது கடவுள் இல்லை என்று சொல்லி கொல்கிறார்களா? எந்த அளவுக்கு கொலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு பிரார்த்தனையும் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா யாராவது? ஏன் முஸ்லீம் மட்டும் தான் அப்படி செய்வதை காட்ட வேண்டும் என்று கேட்பவர்கள் கொஞ்சம் கமலின் முந்தைய படமான அன்பே சிவத்தை பார்க்கவும். 

படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரமான உமர், தான் தமிழ் பேச காரணம் கொஞ்ச நாட்கள் தமிழகம், அந்தமான் பகுதிகளில் பதுங்கி இருந்ததாக சொல்வது. இங்கே கமல் கவனமாக பயிற்சி என்பதை தவிர்த்திருக்கிறார், காரணம் தமிழக இஸ்லாமியர்கள் பற்றி அவர் அறிந்திருப்பதால்.

படத்திற்கு தடை என்பதை அரசியல் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க முடிகிறது. ஒருவேளை கமல் இதில் அமெரிக்கர்களை காப்பாற்றுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்னவோ. அப்படி என்றாலும் படத்தை ஆப்கனில் கூட தடை செய்ய முடியாது, அந்த அளவுக்கு உண்மைகளை மட்டுமே சொல்கிறது விஸ்வரூபம்.

எப்படி முஸ்லீம்கள் மட்டுமோ மற்றும் எல்லா முஸ்லீம்களுமோ தீவிரவாதிகள் இல்லையோ அதே போல அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. அங்கேயும் அரசியல் செய்யவே தீவிரவாதம் என்ற பெயர் பயன்படுத்தபடுகிறது.

கமல் ஏன் முஸ்லீம் தீவிரவாதம் பற்றிய படத்தை எடுத்தார்? இஸ்ரேல், அமெரிக்கா, இலங்கை அரசுகள் செய்யும் கொலைகளை படமாக எடுக்க வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், வாருங்கள் வந்து நீங்கள் எடுங்கள், உண்மையை உலகுக்கு சொல்லுங்கள். 

ஒரு கலைஞனை நீ ஏன் இதை எடுத்தாய், அதை எடுக்கவில்லை என்று கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஏன் என்றால் கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை". இந்த படத்தை உங்களை பார்க்க சொல்லி திணிக்கவில்லை கமல். அல்-கொய்தா பற்றிய தன் பார்வையை ஒரு படமாக எடுத்துள்ளார். 

28 முஸ்லீம் அமைப்புகள் படத்தை எதிர்க்கின்றன என்று சொல்லும் எண்ணிக்கையே காட்டுகிறது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை. எங்கே இந்த படத்தை ஆதரித்து பேசினால் தன்னை மதத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். ரிசானா விஷயத்திலேயே இது தெரிந்தது. மதத்தை தாண்டி கொஞ்சம் வெளியே வந்து யோசியுங்கள் உங்களுக்குள் இருக்கும் மனிதம் புலப்படும். 

இந்துக்களில் செய்யும் சாதி அரசியலை தான் உங்கள் தலைவர்களும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் பல பிரச்சினைகள் முடிந்து விடும். அப்போது விஸ்வரூபம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல உங்களுக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவின் பின்னூட்டத்தில் டேம் 999, இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம் போன்றவற்றிற்கு நான் கூறிய கருத்துக்களை ஏடாகூடமாக யாராவது பயன்படுத்த விரும்பினால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அந்த படங்கள் மீதான தடையும் தவறு என்பதே என் கருத்து :-) 

16 comments:

  1. // இதை இயக்குனர் கமல் உதவியுடன் நடிகர் கமல் மிக அற்புதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். // அருமை
    //"யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை".// உங்க டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு

    எது எப்படியோ என்ன விஸ்வரூபம் பார்க்க விடமா பன்ணிடாங்க...

    பதிவில் நீங்க சொல்ல வந்த கருத்துக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளக் கூடியது...

    ReplyDelete
  2. நன்றி பிரபு...அருமையான விமர்சனம். கலைஞனை காப்பது அரசனின் கடமை. பார்ப்போம் அரசு என்ன செய்கிறது என்று?

    ReplyDelete
  3. கமல் ஏன் முஸ்லீம் தீவிரவாதம் பற்றிய படத்தை எடுத்தார்? இஸ்ரேல், அமெரிக்கா, இலங்கை அரசுகள் செய்யும் கொலைகளை படமாக எடுக்க வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், வாருங்கள் வந்து நீங்கள் எடுங்கள், உண்மையை உலகுக்கு சொல்லுங்கள். நன்றி பிரபு...

    ReplyDelete
  4. நல்லா எழுதி இருக்கீங்க பிரபு.
    படத்தை பார்த்த முஸ்லிம் மத தலைவர்கள் எந்த அளவு புரிஞ்சு இருக்காங்கனா, ஓமர் கதாபாத்திரம் 'தான் "தலிபான்" தலைவர் முல்லா முஹம்மத் ஓமர்ன்னு புரிஞ்சு இருக்காங்க. அது போக அந்த தலைவர் இந்தியா வந்துட்டு போனதுக்கு கமல் கிட்ட ரெகார்ட் கேட்கிறாங்க. கஷ்ட காலம் தான். இவனுக மாதிரி அறிவாளியை எங்கயாவது பார்க்க முடியுமா.

    ReplyDelete
  5. //28 முஸ்லீம் அமைப்புகள் படத்தை எதிர்க்கின்றன என்று சொல்லும் எண்ணிக்கையே காட்டுகிறது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை. எங்கே இந்த படத்தை ஆதரித்து பேசினால் தன்னை மதத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். //

    லாஜிக்கலான கேள்வி.

    ReplyDelete
  6. VISHWAROOPAM VIMARSANAM NITHARSANAMANA UNMAI

    THANKS PRABU

    ReplyDelete
  7. VISHWAROOPAM VIMARSANAM NITHARSANA UNMAI

    THANKS PRABU

    ReplyDelete
  8. @ பிரபு : ஏன் குற்றப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது ???அது தமிழ் ஈழம் பற்றிய உண்மை நிலைபாடை தானே சொல்கிறது!!
    ஏன் டாம் 999 தடை செய்யப்பட்டது ???டாம் 999 தயாரிப்பாளரை நஷ்டத்தில் ஆழ்த்தியது ஏன் ?அதுவும் சென்சர் அனுமதி வழங்கிய பின்னரே தடை செய்யப்பட்டது.. அப்போதேல்லாம் எங்கே போனீர்கள் ? அப்போதேல்லாம் எங்கே போனது கருத்து சுதந்திரம்??
    கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை".., கலைஞன் இல்லை,(என்ன கலைஞன் என்றால் ரெட்டை கொம்பா அவனுக்கு??) ஒரு சமுதாயமும், ஏன் ஒரு மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை(விஸ்வரூபம் கதை அந்த மாதிரி தான் அமைக்கப்பட்டுள்ளது).. உலக ரவுடி அமெரிக்க ஒரு அப்பாவி என்றும் ஆப்கான் மக்கள் ,தலிபான் தீவிர வாத கூட்டம் என்றும் காட்டியிருக்கிறான்..கமல் ஒரு கலைஞன், ஆகையினால் அவன் விருப்பத்திற்கு படம் எடுப்பார்..!!முஸ்லிம்கள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதா??

    ReplyDelete
  9. @ பிரபு : ஏன் குற்றப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது ???அது தமிழ் ஈழம் பற்றிய உண்மை நிலைபாடை தானே சொல்கிறது!!
    ஏன் டாம் 999 தடை செய்யப்பட்டது ???டாம் 999 தயாரிப்பாளரை நஷ்டத்தில் ஆழ்த்தியது ஏன் ?அதுவும் சென்சர் அனுமதி வழங்கிய பின்னரே தடை செய்யப்பட்டது.. அப்போதேல்லாம் எங்கே போனீர்கள் ? அப்போதேல்லாம் எங்கே போனது கருத்து சுதந்திரம்??
    கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை".., கலைஞன் இல்லை,(என்ன கலைஞன் என்றால் ரெட்டை கொம்பா அவனுக்கு??) ஒரு சமுதாயமும், ஏன் ஒரு மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை(விஸ்வரூபம் கதை அந்த மாதிரி தான் அமைக்கப்பட்டுள்ளது).. உலக ரவுடி அமெரிக்க ஒரு அப்பாவி என்றும் ஆப்கான் மக்கள் ,தலிபான் தீவிர வாத கூட்டம் என்றும் காட்டியிருக்கிறான்..கமல் ஒரு கலைஞன், ஆகையினால் அவன் விருப்பத்திற்கு படம் எடுப்பார்..!!முஸ்லிம்கள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதா??

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் Anonymous என்ற முகமூடியை கழட்டி விட்டு உங்கள் உண்மையான பெயரில் வாருங்கள் உங்களுக்கு பதில் சொல்கிறேன்.

      பெயர் கூட சொல்ல தைரியம் இல்லாதவர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை.

      Delete
  10. @ பிரபு : ஏன் குற்றப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது ???அது தமிழ் ஈழம் பற்றிய உண்மை நிலைபாடை தானே சொல்கிறது!!
    ஏன் டாம் 999 தடை செய்யப்பட்டது ???டாம் 999 தயாரிப்பாளரை நஷ்டத்தில் ஆழ்த்தியது ஏன் ?அதுவும் சென்சர் அனுமதி வழங்கிய பின்னரே தடை செய்யப்பட்டது.. அப்போதேல்லாம் எங்கே போனீர்கள் ? அப்போதேல்லாம் எங்கே போனது கருத்து சுதந்திரம்??
    கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை".., கலைஞன் இல்லை,(என்ன கலைஞன் என்றால் ரெட்டை கொம்பா அவனுக்கு??) ஒரு சமுதாயமும், ஏன் ஒரு மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை(விஸ்வரூபம் கதை அந்த மாதிரி தான் அமைக்கப்பட்டுள்ளது).. உலக ரவுடி அமெரிக்க ஒரு அப்பாவி என்றும் ஆப்கான் மக்கள் ,தலிபான் தீவிர வாத கூட்டம் என்றும் காட்டியிருக்கிறான்..கமல் ஒரு கலைஞன், ஆகையினால் அவன் விருப்பத்திற்கு படம் எடுப்பார்..!!முஸ்லிம்கள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதா??

    ReplyDelete
    Replies
    1. குற்றப்பத்திரிக்கை // இது தடை செய்யப்பட்ட போது இது போல சமூக வலைதளங்களும், மீடியாவும் இருந்திருந்தால் தடை நீங்கி இருக்கும்.

      டாம் 999 // இது எந்த சூழ்நிலையில் வந்த படம், யார் எடுத்தார் என்பது போன்ற பல காரணங்களினால் தான் தடை செய்யப்பட்டது. இதை தடை செய்யச் சொல்லி போராடியது குறிப்பிட்ட சாதி/மத மக்கள் இல்லை. ஒட்டு மொத்த தமிழகம்.

      இதே படம் மற்ற மாநிலங்களில் வெளியானதே என்று கேட்டால் அது நகைப்புக்குரியது, ஏன் என்றால் முல்லை பெரியாறு குறித்த திரைப்படம் தமிழ் நாட்டை தானே பாதிக்கிறது.

      மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் படம் வெளியானது இந்தியா மற்றும் சவூதியில் மட்டுமே. காரணம் தமிழர்கள் மற்றும் கேரளா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

      முஸ்லிம்கள் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதா?? //

      கமலின் ஹேராம் இந்து தீவிரவாதத்தை பற்றி சொன்னதே அதை மறந்து விட்டீர்களா? அன்பே சிவம், தேவர் மகன் போன்ற படங்கள் யாரைப் பற்றி சொல்கின்றன.

      ஆப்கனில் தீவிரவாதம் செய்பவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை, அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

      அப்படி படம் ஒட்டு மொத்த முஸ்லீம் மத மக்களையும் பாதிக்கிறது என்றால் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் மற்றும் மலேசியா என பல நாடுகளில் வெளியாகி உள்ளதே அங்கே இதை விட அதிகம் முஸ்லீம் மக்கள் தானே வாழ்கிறார்கள். ஏன் அவர்கள் எதிர்க்கவில்லை?

      -----

      இப்போது உங்களிடம் சில கேள்விகள்.

      1. நீங்கள் இன்னொசென்ஸ் ஆப் முஸ்லீம் என்ற படத்தை எதிர்த்தீர்களே அப்போது இங்கே யாராவது அது தவறு என்று விமர்சித்தார்களா ?

      2. இஸ்லாம் தீவிரவாதிகள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் என்று என்றாவது சொல்லி உள்ளீர்களா?

      3. தீவிரவாதிகள் கழுத்தை அறுத்துக் கொள்வது எல்லாம் சரியல்ல என்று சொல்கிறீர்களே. மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட ரிசானா நபீக் யார்? அவரை கொன்றது யார்? அதை கண்டித்தீர்களா?

      4. அடுத்து மிக முக்கியமாக படம் பார்த்து விட்டீர்களா? எந்த காட்சி இஸ்லாத்தை அவமானபடுத்துகிறது?

      Delete
    2. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு கூறும் காரணங்கள் , இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் திரைப்படம் குறித்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள், ரிசானா நபீக் விவகாரங்கள் பற்றிய உங்களது ஆட்சேபனைகள் ஆகிய அனைத்தும் தவறானவை, நியாயங்களுக்கு புறம்பானவை,பொய்யானவை.

      இதை நிரூபிக்க முஸ்லிம் சகோதரர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒன்றுக்கு ஒன்று என்கிற அடிப்படையில் விவாதித்து இங்கேயே முடித்து விடாமல் பகிரங்கமாக பேச வேண்டும். நாம் சொல்வதும் எழுதுவதும் சமூக பொறுப்பை சார்ந்திருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எதை பேசினாலும் அதை மக்கள் மத்தியில் பொதுவாக வைப்போம்.

      நேரடியாக பேச வேண்டும் என்றால் அதற்கும் ஏற்பாடு செய்கிறோம். எழுத்து மூலமாக விவாதிக்க மட்டும் நீங்கள் தயார் என்றால் அதற்கும் நாங்கள் தயாராகிறோம்.

      என்றைக்கு, எந்த முறையில் விவாதம் செய்வது, யார் யார் விவாதிப்பது, எத்தனை பேர் மத்தியில் விவாதிப்பதுபோன்றவற்றை எழுத்து மூலம் பேசி முடிவு செய்து ஒப்பந்தமிட்டு கொள்ளலாம்.

      இதற்கு நீங்கள் தயார் என்றால் உங்கள் பதிலை எனக்கு இரு தினங்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பவும்.

      இதற்கு நீங்கள் தயார் இல்லை என்றால் நீங்கள் பேசுவதில் உங்களுக்கு உறுதி இல்லை, உங்களிடம் போதுமான உண்மை இல்லை என்று நாங்கள் முடிவுக்கு வருவோம்.

      உங்களிடம் இருந்து, இந்த அழைப்பை ஏற்பதை தவிர வேறு ஒன்றும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை..விவாதத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
      எனது மின்னஞ்சல் yasir_333@yahoo.com

      Delete
    3. விஸ்வரூபத்திற்காக விவாதிப்பது என் வேலை அல்ல. பதிவில் என் கருத்தை கூறி உள்ளேன். அடுத்து உங்கள் கேள்விகளுக்கு என் பதிலை சொல்லி உள்ளேன். இப்போது நான் கேள்வி கேட்டால் தவறானவை, நியாயங்களுக்கு புறம்பானவை,பொய்யானவை என்கிறீர்கள்.

      பதில் அளிக்க விருப்பமிருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. நான் கேட்ட கேள்விகள் பதிலின்று நிற்கும் போது இந்த பதிவை படிப்பவர் தெரிந்து கொள்ளட்டும் எது பொய்,நியாயம் என்று.

      என் கேள்விகளுக்கு பதில் இல்லா இடத்தில், நானும் மற்றவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

      நன்றி.

      குறிப்பு.

      மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பதாய் இருந்தால் கீழே உள்ள ஒரு கேள்வியையும் சேர்த்தும் பதில் சொல்லவும்.

      5. பாகிஸ்தானில் சகோதரி மலாலா தாலிபான்களால் சுடப்பட்டாரே, அது எந்த வகையில் நியாயம்? தவறென்றால் அப்படிப்பட்ட தாலிபான் குறித்து படமெடுப்பதில் என்ன தவறு ?

      Delete
  11. #பெயர் கூட சொல்ல தைரியம் இல்லாதவர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை#
    முடிந்தால் விவாதத்திற்கு வரவும்..உங்கள் கருத்து உண்மை என்று நிரூபிக்க உங்களுக்கு தெம்பு இருந்தால் விவாதத்திற்கு வரவும்..விவாதத்திற்கு வந்தால் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் தக்க ஆதாரங்களுடன் பதில் தரப்படும் மற்றும் உங்கள் கேள்விகள் அனைத்தும் முட்டாள்தனமானவை என்று நிரூபிக்கப்படும். நீங்கள் விவாதத்திற்கு தயார் இல்லை அல்லது தயங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கே உங்கள் வாதத்தின் மீது நம்பிக்கை இல்லை.அது தான் உண்மை!!

    ReplyDelete
    Replies
    1. நல்லது. உங்களுடன் விவாதிக்க தெம்பு எல்லாம் தேவை இல்லை. வெறும் கேள்விகள் போதும்.அது மேலேயே உள்ளது. அத்தோடு மேலேயே சொல்லி விட்டேன் விஸ்வரூபத்திற்காக விவாதிப்பது என் வேலை அல்ல. நீங்கள் இதை தைரியமின்மை, முட்டாள்தனம் இன்னும் என்ன நினைத்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

      என் கருத்துக்களை பகிர்ந்தேன், மாற்று கருத்துகளுக்கு பதில் சொல்லி இருக்கிறேன். இது குறித்து நீங்கள் மேலும் விவாதிக்க வேண்டுமானால் கமலஹாசனை கூப்பிட்டு கொள்ளுங்கள்.

      அதற்கு முன் உங்களுக்கும் தைரியம் மற்றும் நீங்கள் சொல்லும் இன்ன பிறவெல்லாம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லலாம். இல்லையென்றால் எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை, ஏன் என்றால் நான் நூறு கோடி செலவு செய்தெல்லாம் இந்த பதிவை எழுதி விடவில்லை.

      Delete