Pages

Wednesday, January 26, 2011

நெஞ்சம் பொறுக்குதில்லையே!!



நெஞ்சம் பொறுக்குதில்லையே

வணக்கம் நண்பர்களே இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

இந்த கவிதை நான் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் போது(10.08.2005 அன்று) 16 வயதில்  சுதந்திர தினத்துக்கு எழுதி முதல் பரிசு பெற்றது.


"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரின் நிலை கண்டு " என்பதன் ஈர்ப்பில் எழுதியது. எந்த மாற்றமும் செய்யாமல் இப்போது.



நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
அரசியல் எனும் பெயரில்
அதை வியாபாரமாக்கி
மக்களை ஏமாற்றும் சில
கயவர் எண்ணம் கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
பாலூட்டி சோறூட்டிய
அன்னைக்கு இறுதியில்
பால் ஊற்ற நினையாத
சிலர் துரோகம் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
குருதட்சணை கொடுக்க வழியின்றி
படித்த பெண்ணிடம்
வரதட்சணை கோரும்
சில கயவர் நிலையால்,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
 ஆன்மீகம் என்று சொல்லி
அதை தொடராமல்
மக்களை ஏமாற்றும்
சிலர் மனம் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
தன்மகன் பாஸ்மார்க்கா என்று
அறியாமல், விடிந்தவுடன்
டாஸ்மாக்கில் இருக்கும்
குடிமகன் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
ஊதியம் வாங்கும் கணவனை
ஊக்கம் செய்யாமல்
அழகுக்கும் ஆடம்பரத்துக்கும்
ஆசை கொள்ளும் சில
மாதர் மடமை கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இன்றைய இளைஞர் பலர்
இலட்சியம் எண்ணாமல்
சினிமா நடிகைகளை
எண்ணும் எண்ணத்தால்,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இன்றைய மாணவர் சிலர்
கல்வியை நினையாமல்
கலவியை நினையும்
நிலை கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
அன்னை நாட்டை நினையாமல்
அண்டை நாட்டு மோகம்
கொண்ட நம்
அன்பர் சிலர் நிலை கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

                                                                                   _கி.பி

Friday, January 14, 2011

"ஜல்லி"க்கட்டு

அடக்க வேண்டிய
கொடுமைகள் ஆயிரமிருக்க,
ஐந்தறிவு காளையினை
அறிவே இல்லாமல்
அடக்க நினைக்கும்
தமிழனால்- இது
"ஜல்லி"க்கட்டு  தான்!!


வீர விளையாட்டாம் இது 
நடத்த உரிமை கோரும்
அரசியல்வாதி எவனும்- ஏன்
அவன் மகனும் கூட
கலந்தது இல்லை!- காயம்பட்டவன்,
மரணம் கொண்டவன் எல்லாம்
வேலைவெட்டி இல்லாத் தமிழன்!!