காலம் முழுவதும்
காதலிக்க நேரமில்லை
அதனால்தான் தினமும்,
காலையிலிருந்து மாலைவரையும்,
மாலையிலிருந்து காலைவரையும்,
காதலிக்கிறேன்!!!
கொஞ்சமாய் சிரித்தாள்;
கொஞ்சமாய் அழுதாள்;
கொஞ்சமாய் அடித்தாள்;
கொஞ்சமாய் அணைத்தாள்;
கொஞ்சமாய் இனித்தாள்;
கொஞ்சமாய் கசந்தாள்;
மொத்தமாய்.....................
........................... காதலித்தாள்;
அதனாலேயே
அவள் பெயர் காதலி !!!!
படிக்கக் கூடுவதால்
பள்ளிக்கூடம்;
படித்தவுடன் கூடுவதால்
பள்ளியறை ;
காதலித்து காதலித்து
களைப்பானேன்
காதல் உன் மீதென்பதால்
களைப்பும்
களைப்பானது !!!
மலர் கண்காட்சி
பக்கம் போகாதே
வண்ண மலர்களை
விடுத்து- உன்
கன்ன மலர்களை
மொய்க்கத் தொடங்கிவிடும்
வண்ணத்துப்பூச்சிகள்!!!
_கி.பி
நண்பர்களே புது டெம்ப்ளேட் எப்படி உள்ளது எனவும் கூறி செல்லவும்.