ஈகரை கவிதைப் போட்டி ஐந்தில் இரண்டாம் பரிசு பெற்ற என் கவிதை. மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்த ஈகரைக்கு என் நன்றிகள்.
எட்டணாவுக்கு பத்துதான் என
பதினொரு மிட்டாய் தந்த
பலகாரக் கடை பாட்டி !
அஞ்சு ரூபாய் அதிகம்
அப்புறம் வாங்கிக்கலாம் என
சிரித்த மளிகைக்கடை தாத்தா !
ஒண்ணே கால்கிலோ வருமென
ஒரு கிலோக்கு காசு வாங்கிய
காய்கறி விற்கும் ஆச்சி !
அடுத்தமுறை வருவேன் என
பனிரெண்டுக்கு பத்து வாங்கிய
முடி வெட்டும் பெரியவர்!
தாகத்துக்கு நீர் கேட்டால்
வெயிலுக்கு மோர் தந்த
என் வெள்ளந்தி அப்பாயி !
பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.
அருமையான கவிதை சகோ.
ReplyDeleteரொம்ப நெகிழ வைத்துவிட்டது !!
ReplyDeleteஅருமை
வாழ்த்துக்கள் பிரபு
super brother...
ReplyDeletereally super...
super brother...
ReplyDeletereally super...
Mmm.. heart touching..
ReplyDeleteஅன்பின் பிரபு - பழுது படாத பாசம் - கவிதைக்குப் பரிசு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉண்மையில் அருமையான கவிதை.வாழ்த்துகள் பிரபு !
ReplyDeleteஉண்மைதான் பிரபு ...
ReplyDeleteஉண்மையான வரிகள்.....அழகு கவிதை
ReplyDeleteமிகவும் உண்மையான வரிகள்....
ReplyDeleteஇவர்களை மறந்து டிபார்ட்மெண்டல் ஸ்டோர் சென்று பொருள் வாங்கி அப்படி என்ன பெரிதாய் பெற்றோம்?
//பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.//
சில இடங்களில் படங்களையும் காணோம்!
படங்களில் மட்டும் சிரிக்கும் - பாசம் பகிர்ந்த தலைமுறை ........ நெகிழ்ச்சி பிரபு - இது தான் கவிதையின் நச்சென்ற முடிவு - பரிசுக்கும் காரணம் இதுதான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதலைமுறைப் பதிவு பல தலைகளை திரும்பி பார்க்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை.
ReplyDelete