பொங்கலுக்கு வந்த நண்பன் திரைப்படம் நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள், விமர்சனமும் படித்து இருப்பீர்கள். இது விமர்சனம் அல்ல.
தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விசயங்களை மிக அற்புதமாக கையாளும் சங்கர் செய்த சில தொழில் நுட்ப தவறுகளை சொல்வது மட்டுமே இந்தப் பதிவு.
1. படத்தில் ஒரு காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் கரும்பலகையில் தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லா பிரச்சினையும் அதில் உள்ள தேதி 3/6/98. சரி இதற்கு மேல் விஷயத்துக்கு வருவோம்.
பொறியியல் என்பதால் நான்கு ஆண்டு காலம் படிப்பின் கால அளவு.
2. படத்தில் இலியானா பயன்படுத்தும், இரு சக்கர வாகனம் "ஸ்கூட்டி பெப் பிளஸ்" (Scooty Pep+ ) இது 2005 ஆம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்பட்டது.(நான்கு ஆண்டு என்றால் 2002 தானே?)
3. அடுத்து அனுயாவுக்கு பிரசவம் பார்க்கும் போது youtube ஆனது பயன்படுத்தப்படும்(Vacuum Cup Tutorial). youtube ஆனது 2005 இல் இருந்துதான் இயங்குகிறது.
4. அடுத்து படத்தின் காஸ்டியூம். விஜய், இலியானா உடைகள், விஜய் பயன்படுத்தும் bag ஆகியவை அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை.
5.படத்தில் பயன்படுத்தப்படும் 1100 அலைபேசி(சில இடங்களில் மட்டும் ) ஆனது 2003 இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
6. ஆசிரியர் தினத்துக்கு சத்யன் வாசிக்கும் கட்டுரையை எடிட் செய்யும் போது கணினியில் Windows 7 OS இருக்கும். 1998 -ல் Windiows 7 ????
7. படத்தில் காட்டப்படும் மருத்துவமனையில் LCD மானிட்டர்கள் இருப்பதாக இருக்கும். அவை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனது என்பதை கவனிக்க மறந்து விட்டார்கள் போல.
வேறு ஒரு இயக்குனர் என்றால் இவை போகிற போக்கில் மறந்து இருக்கலாம். ஆனால் சங்கர் எனும் போது தான் எனக்கு இது கவனிக்க தோன்றியது.
இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.
மற்றபடி படம் அருமை.
இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.
மற்றபடி படம் அருமை.
1.Global Hospital kuda tha apo illa...
ReplyDelete2.Nokia 1100 kuda tha 1998 la illa...
3.Mechatronics subject mechanical engg la 1st yr la varathu...
4.Ileana marriage scene la srikanth car stage ku nera niruthuvaru but sathyaraj varapo scene balcony la irukira mathiri kattuvanga..
Ivlo flaws irunthum padam nalla irukku...
திருட்டு விசிடியில இருந்து எடுத்துக்காட்டு சொல்ல படம் எடுத்து இருக்கிங்க...
ReplyDelete@ Sam
ReplyDeleteஐந்து பாயிண்ட் எடுத்து வைத்து ஒன்றை மறந்து விட்டோமே என்று நினைத்தேன். 1100 நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
மற்ற மூன்றும் எனக்கு புதிது. குறிப்பாக இலியானா திருமண காட்சி நான் யோசிக்கவே இல்லை. மிக்க நன்றி சகோ.
நல்ல...கவனம்....
ReplyDeleteஏன் பாஸ் இவ்ளோ அலார்ட்’ஆவா இருக்கீங்க???
ReplyDeleteநல்ல நோட் பண்ணியிருக்கீங்க.இயக்குனராகும் முயற்சி ஏதாவது?
ReplyDeleteயூடியூப் -2005 ஓகே!
ReplyDeleteஅந்த சீனல இன்னோர் ஓட்டையும் இருக்கு பாஸ்.
சமபந்தப் பட்ட வீடியோ-வோட, URL அட்ரஸ் பாரில் இருக்காது. வெறும் youtube.com ன்னு மட்டும்தான் இருக்கும்.
அப்பறம் நீங்க குறிப்பிட்ட்ருக்கிற 3/6/98 விஜய் முதல் நாள் வகுப்புன்னு சொல்வார். ஆனா, எஸ்.ஜே.சூர்யா வீட்ல மாட்டியிருக்கும் சர்ட்டிஃபிக்கேட்ல படிச்ச காலம் 1997-2001-ன்னு போட்டிருந்த ஞாபகம். (இது உறுதியா தெரியல..பார்த்து சொல்றேன்)
கிட்டத்தட்ட இதே பாணியில் நான் எழுதிய சுறா படத்திற்கான பதிவு.
ReplyDeletetucklasssu.blogspot.com/2010/05/blog-post.html
:-)
@ ♠ ராஜு ♠
ReplyDelete//சமபந்தப் பட்ட வீடியோ-வோட, URL அட்ரஸ் பாரில் இருக்காது. வெறும் youtube.com ன்னு மட்டும்தான் இருக்கும்.//
சில ப்ரௌசெர்களில் இந்த மாதிரி அட்ரெஸ் பார் இல்லாமல் இருக்கும். (நீங்களே disable செய்யலாம்).
அடுத்த எஸ்.ஜே.சூர்யா நான் கவனிக்கவில்லை.
உங்கள் பதிவு படித்தேன் அருமை.
அட வேல வெட்டி இல்லாத முண்டங்களா!!!!
ReplyDelete@ Salman
ReplyDeleteதேங்க்ஸ் பாஸ். இப்படி வெட்டித் தனமா கமெண்ட் போடாமா, நீங்க உங்க வேலைய பார்க்கலாம்.
nalla kavanamaa padam paarthirukinga :):)
ReplyDeleteஅருமையான பதிவு...நன்றி.
ReplyDeleteநல்லா கவனமா படம் பார்த்திருக்கின்றீர்கள்.ஆனால் படத்தோட முக்கியமான கருத்தே கல்விமுறை சரி இல்லை என்பதே,ஒரு தேதியை கூட மாற்றாமல் ஏன் கவனிக்காமல் பாடம் நடத்தப்படும் நிறைய கல்விநிலையங்கள் உள்ளன.இங்கேயும் இயக்குனர் அதைத்தான் சொல்லியிருக்கின்றார்.எனவே இது technical error அல்ல.
ReplyDelete@ senthilvelan
ReplyDeleteபாஸ் அதுக்குன்னு இவ்ளோ வருஷ கேப்பா?
Anyway good comments guys, I watched it only once .............cant make any comments....SORRY!
ReplyDeleteஹாய் பிரபு - கையிலே பூதக் கண்ணாடியும் கண்ணுல விளக்கெண்ணையுமா படம் பாத்தியா ? இவ்ளோ மைனூட்டா கவனிச்சிருக்கே = பலே பலே ! நன்று விமர்ச்னம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete