விதவிதமாக படங்கள் கடந்த வருடத்தில். சில ஏன் இப்படி? சில அட போட வைத்தன. பல பணம் வீண் என்று.
எனக்கு பிடித்தவை ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், வாகை சூட வா, மௌன குரு, வானம், பயணம். பார்க்க துடிக்கும் படங்கள் பாலை, நர்த்தகி,வெங்காயம்(இவைகளுக்கு விமர்சனத்தை பார்த்தே என் விமர்சனம்).
ஆரண்ய காண்டம் இந்த வருட தமிழ் சினிமாவின் திருஷ்டி பொட்டு. கேமரா, திரைக்கதை, எடிட்டிங் இவை எல்லாம் சேர்ந்து ஒரு மிகப்பெரிய படத்தை தந்தன. குமாரராஜா வழக்கமான தமிழ் சினிமாவுக்கு நுழையாமல் அடுத்த நிலைக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.
- ஆடுகளம் - தமிழ் சினிமாவுக்கு புதிய களம்
- சிறுத்தை - இடுப்பு கறி மட்டும் சாப்பிட்டது
- இளைஞன் - ஆவ்வ் ஒன்று
- காவலன் - தளபதியை காப்பாற்றியவன்
- யுத்தம் செய் - இன்னொரு அஞ்சாதே
- தூங்கா நகரம் - மற்றும் ஒரு படம் மதுரையிலிருந்து
- பயணம் - புதிய பயணம்
- நடுநிசி நாய்கள் - விபரீத முயற்சி
- சீடன் - சில்லறை முயற்சி
- சிங்கம் புலி - சில்மிஷம்
- லத்திகா - தமிழ் சினிமாவின் பயங்கரம்
- முத்துக்கு முத்தாக - பிள்ளைகளுக்கு
- மாப்பிள்ளை - மொக்கை மாப்பிள்ளை
- பொன்னர் சங்கர் - ஆவ்வ் இரண்டு
- வானம் - வானவில்
- எங்கேயும் காதல் - மொக்கை காதல்
- அழகர்சாமியின் குதிரை - பந்தயத்தில் ஜெயிக்க தவறிய குதிரை
- நர்த்தகி - அற்புதம்
- ஆரண்ய காண்டம் - அற்புதம்
- அவன் இவன் - எவன் இவன்?
- 180 - ஓகே
- வேங்கை - தண்டச் செலவு பார்த்தவருக்கு
- தெய்வ திருமகள் - சுட்ட நிலா
- காஞ்சனா - அய்யோ மம்மி
- வெப்பம் -சூடு கம்மி
- டூ - காமெடி கும்மி
- போட்டா போட்டி - பார்க்கலாம்
- வெங்காயம் - உரித்துப் பார்க்கலாம்
- மாங்காத்தா - ஜெயித்த குதிரை
- எங்கேயும் எப்போதும் - எப்போதும் எங்கேயும்
- வந்தான் வென்றான் -பார்த்தவன் நொந்தான்
- முரண் - வெளியே சொல்லி சுட்டது
- வாகை சூட வா - வெற்றிபெறாத வாகை
- வெடி - நமுத்துப்போன வெடி
- வேலூர் மாவட்டம் - மற்றுமொரு
- சதுரங்கம் - தாமதமான ஆட்டம்
- வர்ணம் - வானவில்
- 7ஆம் அறிவு - நாலாவது அறிவுக்கு மேல் தேறல
- வேலாயுதம் - பல முறை பயன்படுத்தப்பட்ட ஆயுதம்
- தம்பி வெட்டோத்தி சுந்தரம் - வருடத்தில் சொதப்பியது
- பாலை - தமிழர்களின் பசுமை
- வித்தகன் - பலமுறை வித்த கன்
- போராளி - போராடவே இல்லை
- ஒஸ்தி - பள்ளிச்சிறுவனின் போலீஸ் வேஷம்
- மம்பட்டியான் - பழைய பிரியாணி
- மௌன குரு - கலக்கல்
லத்திகா - தமிழ் சினிமாவின் பயங்கரம்//
ReplyDeleteகொடூரம் அவ்வ்வ்வ்வ்வ்......!!!
வெங்காயம் படத்திற்க்கு நல்ல விமர்சனம் தந்தற்க்கு நன்றி
ReplyDelete-சங்ககிரி ராச்குமார்
வெங்காயத்திற்க்கு நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி-சங்ககிரி ராஜ்குமார்
ReplyDeleteநல்ல அலசல்.
ReplyDelete//பார்த்தவன் நொந்தான்//
ReplyDeleteநச்!!
ஒரே வரியில் விமர்சனம் அருமை.
//பாலை - தமிழர்களின் பசுமை //
அசத்தல் !!
சில படங்களின் விமர்சனம் சிரிப்பை வரவழைத்தது.
ரசித்தேன் :))
//வேங்கை - தண்டச் செலவு பார்த்தவருக்கு//
ReplyDeleteஎனக்கும்....
அய்யோ மம்மி... சூடு கம்மி... காமெடி கும்மி...
ReplyDeleteகவிதா... கவிதா...
HI..HI..HI.. SEMA NAKKALS..
ReplyDelete