Pages

Saturday, May 12, 2012

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை. 

இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி வீரேந்திர நாத்". 



தொடர்ந்து லிங்குசாமி, விஜய் படங்களையே பார்த்தவனுக்கு மணிரத்னம், கமல் படங்களை பார்த்தால் எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுன்னு ஏறும்ல அதான், அதேதான். 

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கில் எழுதப்பட்ட இவரது பெரும்பான்மையான நாவல்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நிறைய மொழிபெயர்ப்பு செய்தவர் கெளரி கிருபானந்தன்

நான் முதலில் படித்த நாவல் "துளசி தளம்", அமானுஷ்யம், அறிவியல் என கலந்து எழுதி இருப்பார், ஒரே நாளில் படித்து விட்டேன், அடுத்து "மீண்டும் துளசி" இது முந்தைய நாவலின் இரண்டாம் பாகம். முதலாவதை விட இது மிகவும் அருமை. 

தொடர்ந்து சாகர சங்கமம், அந்தர் முகம், பணம் மைனஸ் பணம், நிகிதா, 13-14-15, பட்டிக்காட்டு கிருஷ்ணன், பிரளயம், தளபதி, தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் (சிறுகதை தொகுப்பு),  தூக்கு தண்டனை,பர்ண சாலை என பல நாவல்களை படித்தேன். ஒரு முறை, இரு முறை அல்ல. குறைந்த பட்சம் மூன்று நான்கு முறை. ஆம் ஒரு படம் போல கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருப்பார். பல நேரங்களில் படங்கள் கூட இதனை சொதப்பி விடும். 

ஆனால் இவர் மொத்தம் மொத்தம் 50 நாவல்கள் எழுதி இருக்க, நான் அதில் பாதியை கூட படிக்க வில்லை. ஏன் என்றால் எங்கள் ஊர் நூலகத்தில் மட்டுமே கிடைத்தன அவை.  நிறைய இணைய நண்பர்கள் கூட இதே நிலையில் இருந்தனர். 

ஒரு நாள் வலைமனை சுகுமார் சுவாமிநாதன் அவர்களின் எண்டமூரி வீரேந்திரநாத் பற்றிய பதிவை படித்து விட்டு, அவரிடம் இது குறித்து கேட்ட போது நூலகத்தில் தான் அவரும் படித்ததாக கூறினார். ஆனாலும் இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து என் முயற்சிகள் தொடர, திடீரென ஒரு தளத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை கண்டேன். கலிங்கபட்டில இருந்தவனுக்கு கலிபோர்னியாவுக்கு இலவச டிக்கெட் கிடைத்தால் எப்படி குதிப்பான், அப்படி தான் குதித்தேன் நானும். 

நான் மட்டும் குதித்தால் போதுமா? எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அனைத்து ரசிகர்களும் குதிக்க, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நான் கண்டெடுத்த அனைத்தின் இணைப்பும் உங்களுக்கு தருகிறேன். 

இவை அனைத்தையும் Upload செய்த நண்பரும் நூலகத்தில் இருந்தே ஸ்கேன் செய்து இருக்கிறார். இதற்கு Copyright பிரச்சினை இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், மழை நீரை குடிக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? என்ஜாய்...... 

அத்தோடு ஒரு முக்கிய விஷயம், இவரது நாவல்களை எங்கேனும் வாங்க முடியும் என்றால் அதை இங்கே தெரிவிக்கவும். இரண்டே நாவல்கள் மட்டுமே  விலைக்கு நான் வாங்கி உள்ளேன். மற்றவை இணையத்தில் வாங்க முடியவில்லை. கொரியர், VPP என்று எதன் மூலம் வாங்க முடியும் என்றாலும் சொல்லுங்கள். என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகமே தனி அல்லவா?

சமீபத்தில் NHM தளத்தில் சில புத்தகங்கள் வந்துள்ளன. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம் - எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

கார்த்திகை தீபம - http://www.mediafire.com/?gh36hta5jvdogdl

ராஜமுத்திரை - http://www.mediafire.com/?ye4ux49mjz9dukn 

வஜ்ர கவசம் - http://www.mediafire.com/?f0qdbbt9e9c8gq9 

வாழ்க்கைப் படகு - http://www.mediafire.com/?4llft866c8asmfg

காதல் செக் - http://www.mediafire.com/?622vc3f589g8q9m

பதியன் ரோஜா - http://www.mediafire.com/?pcxbbqucfcr44ie

புஷ்பாஞ்சலி - http://www.mediafire.com/?965m3dg54cgqd7q

தளபதி - http://www.mediafire.com/?9u9yyl0b1g5ftfu

வெள்ளை ரோஜா - http://www.mediafire.com/?nv62rg0zy2d1022

காகித பொம்மை - http://www.mediafire.com/?vmxx9kilxlm74t6

பணம் மைனஸ் பணம் - http://www.mediafire.com/?i4i32bfdooe1ob2

காதலிக்கிறாள் சரிதா - http://www.mediafire.com/download.php?3x34tab8iavx3tt

Black Master - http://www.mediafire.com/?q8d6iy3wiw5jzp7

தர்மாத்மா - http://www.mediafire.com/download.php?ubd6fftpa26t2do

நாட்டிய தாரா - http://www.mediafire.com/?1gu86h9lyk53mx2

லேடீஸ் ஹாஸ்டல் - http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd

26 comments:

  1. ஆஹா.... தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி.

    துளசிதளம் & மீண்டும் துளசி இவைகளை இந்தப் பயணத்தில் வாங்கிவந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சார் நானும் வாங்க தான் முயற்சி செய்கிறேன். எங்கே கிடைக்கும் என்று சொல்கிறீர்களா?

      Delete
    2. Dear Sir

      I Would like to Purchase the Same Naavals Thulasithalam / Meendum Thulasi Could you give the Correct Information where should I will buy these books pls ? if you are feel free pls reply me and help me in this regards pls

      My email id greatindian1001@gmail.com

      Thanks wtih Regards

      E.RajMurugan

      Delete
    3. Dear Sir

      Kindly Help me pls where should i buy this books in chennai THULASIDALAM / MEENDUM THULASI mail me and help me in this regards pls..my email id greatindian1001@gmail.com

      Thanks with Regards

      E.RajMurugan

      Delete
  2. ஆசிரியருடைய சில புத்தகங்களை சில வருடங்களுக்கு முன் நூலகத்தில் வாசித்திருக்கிறேன், ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். Mediafire Links பகிர்ந்தமைக்கு நன்று.

    ReplyDelete
  3. கிரி ட்ரேடிங், லேண்ட்மார்க் (தமிழ்ப் புத்தகப்பிரிவு) இந்த ரெண்டில் ஒரு இடம். எதுன்னு சரியா நினைவில் இல்லை:(

    ReplyDelete
  4. http://udumalai.com/?name=Endamuree%20VeeradaraNath&auth_id=97

    ReplyDelete
    Replies
    1. முன்பு இவர்களிடம் தான் இரு புத்தகங்கள் ஆர்டர் செய்தேன். ஒன்று தான் இருந்தது. இப்போது பணம், காதலெனும் தீவில் இரண்டும் புதியதாக வந்து உள்ளது, வாங்கி விடுகிறேன்.

      Delete
  5. http://udumalai.com/?name=Endamuree%20VeeradaraNath&auth_id=97

    ReplyDelete
  6. யண்ட்டமூரி வீரேந்திரநாத் தமிழில் பிரபலமானது எண்பதுகளின் தொடக்கத்தில் அவரின் 'துளசிதளம்' தொடர் 'சாவி' வார இதழில் சுசீலா கனகதுர்காவால் மொழிமாற்றப்பட்டு வந்தபோது.

    அவரும் மேலைநாட்டு நாவல்களைக் காப்பியடித்தார் என்று மனவாடு நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.

    ReplyDelete
  7. அருமையான எழுத்தாளர்.. தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் சொல்வேன்.. ஐ லவ் ஹிம்.. நல்ல பதிவு பாஸ்...!!!

    ReplyDelete
  8. இவரது துளசி தளத்தை பல முறை படித்து விட்டேன் .. இந்த கதையை வைத்து பலமுறை வகுப்பை நடதிள்ளேன்

    ReplyDelete
  9. நாங்களும் இவர் எழுதியவற்றை ஆவலுடன் படி(த்திரு)க்கிறோம். சுட்டிகளுக்கு மிக்க நன்றி.மிகவும் பிடித்தது பணம் என்ற நாவல்.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு தம்பி பிரபு.

    ReplyDelete
  11. நல்ல பதிவு . நன்றி

    இவரது நாவல் அலையன்ஸ் பதிப்பகத்தில் கிடைகின்றன . இவரின் "பிரளயம்" நாவல் விண்வெளி சம்பந்தமான நாவல். படு சூப்பராக இருக்கும் .

    //Alliance Publications,

    Mr Srinivasan V(Proprietor)

    +(91)-(44)-24641314

    +(91)-(44)-43009701

    No 244, Near Indian Bank, Ramakrishna Mutt Road, Mylapore, Chennai - 600004//

    ReplyDelete
  12. இவரது நாவல் குறித்து பசியோடு தேடிக்கொண்டிருந்தவனுக்கு கிடைத்த தேவாமிர்தம் இந்த பதிவு.

    இப்பதிவை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் Erode M. Stalin அவர்களுக்கு நன்றி.!

    ReplyDelete
  13. எண்டமூரி வீரேந்திரநாத் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்கள் சில புதிதாக அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்டு உள்ளார்கள். போர்வைக்குள் புகுந்த பூநாகம், மற்றும் ராதையும் குந்தியும்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் ஆன்லைன் மூலம் வாங்க வழி இருந்தால் உங்கள் தளத்தில் தெரிவிக்கவும். நிறைய புத்தகங்கள் ஆன்லைனில் கிடைப்பதில்லை.

      Delete
    2. கௌரி மேடம்.. என் தலைவன் எண்டமூரியை சுசீலா கனகதுர்கா மூலமாக 80 சதவீதமும் உங்கள் மூலமாக 20 சதவீதமும் அனுபவித்து உணர்ந்தவன் நான். அடுத்து அவரது நாவலை எப்போது மொழிபெயர்ப்பு செய்து வெளியிட இருக்கிறீர்கள்.. என் பிறந்தநாளைவிட அதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்

      Delete
    3. http://www.chillzee.in/onlinebooks-menu/online-tamil-books/1215-endamoori-veerendranaath-meendum-thulasi

      try ....some books here

      Delete
  14. அவருடைய நாவல்களை நூலகத்தில் தேடி கண்டுபிடித்து படித்தாள் தான் உண்டு ஏனென்றால் அவருடைய பல நாவல்கள் மறுபதிப்பு வருவதில்லை அவருடைய நாவல்களை தேடும்போது தான் உங்கள் தளத்தை பார்த்தேன் அதில் பல பேர்களுக்கு அவருடைய நாவல்களை அறிமுகபடுத்தி அதில் சில நாவல்களை Mediafire Links தந்ததற்கு நன்றி.தமிழ்தேனி தலத்தில் கூட அவருடைய சில நாவல்களை Mediafire Links தந்துள்ளார்கள் முடிந்தால்(கண்டிப்பாக)பார்க்கவும்.
    பல நல்ல எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகபடுத்த வாழ்த்துக்கள்.
    (கோட்டயம் புஷ்பநாத் நாவல் படித்துப்பாருங்கள் அவருடைய நாவல்கள் கூட சூப்பரா இருக்கும்)

    ReplyDelete
  15. He is in hyderabad. His phone no.9246502662 you can contact him he will tell you where his books available

    ReplyDelete
  16. வணக்கம்.. நானும் எண்டமூரி ரசிகன் தான். ஆனால் உங்களுக்கு ஒரு அதிசயமான ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன். எண்டமூரி எழுதி தமிழில் இதுவரை மொழி பெயர்க்கப்பட்டுள்ள நாவல்களின் எண்ணிக்கை 120. அது அனைத்தையும் நான் படித்துவிட்டேன்.. ஒரு முறை, இருமுறை அல்ல.. பலமுறை..

    ReplyDelete
    Replies
    1. OMG நான் ஒரு 20+ தான் படித்திருப்பேன். ஆன்லைன் மூலமாக வாங்க முடியுமா? இல்லை என்றால் அல்லையன்ஸ் தவிர வேறு பதிப்பகம் மூலமும் அவரது புத்தகங்கள் வந்திருந்தால் அது குறித்த தகவல்களையும் தரவும்.

      Delete
  17. http://www.chillzee.in/onlinebooks-menu/online-tamil-books/1215-endamoori-veerendranaath-meendum-thulasi



    some books here

    ReplyDelete
  18. வணக்கம். அவரின் அனைத்து நாவல்களும் படித்த பாக்கியசாலி. இதில் விட்டுப்போன விறுவிறு நாவல்கள் பல. அதில் கோல்ட் பிஸ்கட், நச்சு வளையம், கண் சிமிட்டும் விண்மீண்கள் ..... பாதி நாவல்கள் திருச்சி மாவட்ட நூலகத்திலும் மீதி திருச்சி பெரிய கடைவீதியில் தேவகி புக் ஸ்டாலில். வாடகைக்கும் விற்பனைக்கும் உண்டு.

    ReplyDelete