ஈகரை கவிதைப் போட்டிக்கு அனுப்பி பரிசு பெறாத என் கவிதை.
இருபது வயது பெண்ணின்
நிர்வாணம் என்ன செய்யும்?
லிங்கம் புடைக்கும் உலகமிதில்
அங்கம் புடைக்க அழுதேன்
என் இனப் பெண்களுக்கு
இறந்த பின்னும் இழிவு கிடைக்க,
மரணத்தை ரசிக்கும் ஓநாய்களாய்
ஒரு கூட்டமதை ருசிக்க,
கண்டுகொள் உலகமே என
காணொளியில் காட்டப்பட – அதில்
மறைக்கப்பட்ட கருப்பில் இருந்து
மலர்ந்த பிஞ்சுகள் கதறியழ,
ரத்தம் படிந்த மண்ணில்
புத்தன் புதிதாய் பிறந்திருக்க,
வெடித்த சிரிப்போடு வேதாளம்
ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்திருக்க,
கேட்ட கேள்விகள் எல்லாம்
கிணற்றில் போட்ட கல்லாக,
திறந்த நிர்வாணத்தில் காண்கிறேன்
மறைந்து கிடைக்கும் மனிதநேயத்தை.
//திறந்த நிர்வாணத்தில் காண்கிறேன்
ReplyDeleteமறைந்து கிடைக்கும் மனிதநேயத்தை//உண்மை உண்மை .
இதயங்கள் பழகிவிட்டது வேதனைகளைத் தாங்க.அதனால்தான் உங்களுக்கு இந்தக் கவிதைக்குப் பரிசில்லை !
ReplyDeleteஅன்பின் பிரபு - மனம் வலிக்கிறது கவிதை படிக்கும் போது.....பரிசு கிடைக்காவிட்டால் என்ன ? எழுதியவனுக்குப் பெருமைதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete