Pages

Friday, April 8, 2011

!! யாதுமாகி நின்றாய் !!

 நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது (2006) மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில் எழுதியது இது. நான் எழுதிய கவிதைகளில் சிறந்த ஒன்றாக நான் கருதுவது. தங்கள் கருத்துக்களை சொல்லிச் செல்லுங்கள்.  


யாதுமாகி நின்றாய் 
தமிழே நீ 
யாதுமாகி நின்றாய் 

எல்லாமாய் நின்று 
எங்கள் வளர்ச்சிக்கு 
உதவிய தமிழே 

உன்னை
தெய்வம் என்று
பூஜிக்கின்றனர் 
எதையும் உணராத 
படமாய் மாற்றி!!

அன்னை என்று 
சொன்னர் மூவாயிரம் 
ஆண்டு காலமாய்,
இன்றோ  நீ 
முதியோர் இல்லத்தில் !!

மரங்களிடையே வீசும்
தென்றல் என்று 
சொல்லிச் சொல்லி 
 மரத்தையே வெட்டும் 
 மறத்தமிழன் ஆனோம் !!

அமுது நீயாம் 
அதைக் குடித்தவர் 
புகழோடிருக்க 
நீ மட்டும் 
அழிந்து வருகிறாய் !! 

உன்னை கன்னி 
என்று அழைத்து 
கடைசிவரை நீ 
முதிர்கன்னியாகவே 
இருந்து விட்டாய்!! 

தெய்வம்; அன்னை; கன்னி; 
தென்றல்; அமுது; என்று 
யாதுமாகி நின்றாய் 
இறுதியில் 
இழிவுபட்டு நின்றாய் !! 

இனியும் ஆடை,
அணிகலன்களோடு
இந்நாட்டினுள் வாராதே;
அதையும் பறித்து 
அம்மணமாக்கி விடுவான் 
அனைத்தும் மறந்த 
மறத்தமிழன் !!

-கி.பி

8 comments:

  1. எலேய் தம்பி அசத்திட்டியே ம்ம்ம்ம் அற்புதமான சாடல், வேதனை கவிதை....!!!
    நல்லா வந்துருக்குப்பா கீப்பிட் அப்...தொடர்ந்து எழுது...

    ReplyDelete
  2. மிக ரசித்த வரிகள்...
    //அமுது நீயாம்
    அதைக் குடித்தவர்
    புகழோடிருக்க
    நீ மட்டும்
    அழிந்து வருகிறாய் !! //

    ReplyDelete
  3. அசத்தலான வரிகளை கொண்டிருக்கும் கவிதை, இறுதியில் சுளீர் என சாட்டை வீசுகிறது.\

    ReplyDelete
  4. கவிதை அருமையாகப்படைக்க வருகிறது உங்களுக்கு. தொடர்ந்து ஆக்கபூர்வமாக, சமூக சிந்தனையுடன், மேலும் பல கவிதைகள் படைக்க என் என்பான ஆசிகள்.

    ReplyDelete
  5. அன்பின் பிரபு - கவிதைகள் அனைத்துமே அருமை . திறமை பளிச்சிடுகிறது. 12ம் வகுப்பில் படிக்கும் போதே மாநில அளவில் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டமை நன்று. யாதுமாகி நிற்கும் தமிழ் இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டு தான் இருக்கிறது பிரபு. பரிணாம வளர்ச்சி சற்றே தமிழ் பேச - எழுதத் தடை போடுகிறது -அவ்வளவு தான். இன்றும் நாம் சிந்திப்பது தமிழில் தான். இதில் எவ்வித ஐயமுமில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete