Pages

Wednesday, July 13, 2011

மாதத்தின் 32-ஆவது நாள்

பள்ளிக்கூடத்துக்கு போன பையன்
திரும்பிடுவானா? - இல்லை
பழம் பொறுக்கினான்னு
சுட்டுடுவாங்களா? - அம்மா

எம்புள்ளைய எப்புடியாவது
ஒரு லட்சம் செலவு பண்ணி
எல்‌கே‌ஜி சேத்துடணும் - அப்பா

இருக்கிற பணத்துல இன்னும்
ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்

எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ

இந்த ஆடித்தள்ளுபடில நாலு
புடவை எடுக்கணும் -பெண்கள்

இந்த பெட்ரோல், டீசலுக்கு எல்லாம்
தள்ளுபடி இல்லையா? - ஆண்கள்

இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
_______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி

எப்புடியாவது இதவிட அதிக
சம்பளத்துக்கு மாறிடனும் - ஐ‌டி பணியாளன்

கடவுளே அடுத்த சி‌டியோ, புதையலோ
வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார்

அம்மா, தாயே வாழ்க்கைல
திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி

.
.
.
.
.
.
.
ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
கவலையின்றி இருப்பது
வாரத்தின் எட்டாம் நாளும்,
மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே !!!



14 comments:

  1. ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா.....!!!

    ReplyDelete
  2. அம்மா, தாயே வாழ்க்கைல
    திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி//

    வச்சிட்டான்ய்யா ஆப்பு.......

    ReplyDelete
  3. திகார் ஜெயில் அவர்களுக்கு சகல வசதிகளோடும் இருப்பதாகக் கேள்வி.

    ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
    கவலையின்றி இருப்பது
    மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே //

    அந்த நாளுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. கவிதை நல்லாருக்கு பிரபு பாராட்டுக்கள் :)

    ReplyDelete
  5. பிரபு சார் ...
    சிந்தனை சிறப்பு .//
    ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ...
    ஒட்டுமொத்தமா அனைவருக்கும் ஒவ்வொரு பீலிங்

    ReplyDelete
  6. அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை ))

    ReplyDelete
  7. அசத்தலான கவிதை...
    வாழ்த்துக்கள்,,,,

    ReplyDelete
  8. வணக்கம் சகோ,

    வாழ்க்கையில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாள் தோறும் அனுபவிக்கும் மனிதர்களின் உள்ளத்தினைக் கவிதையின் முதற் பாதி விளக்கி நிற்கிறது.

    மனிதர்கள் துன்பமின்றி இருப்பது நடக்காத காரியம், அதே போல மாதத்தில் 32 நாட்கள் வருவதும் இயலாத காரியம் என்பதனை இறுதி வரிகள் தத்துவமாக சொல்லுகிறது.

    ReplyDelete
  9. தலைப்பு மட்டும் இல்லை
    அதற்கான விளக்கக் கவிதையும் அருமை அருமை
    பீன்னூட்டமிடாமல் இருந்தால் அடுத்த கவிதை
    சீக்கிரம் கிடைக்குமே என்ற எண்ணம் வந்தாலும்
    நல்ல படைப்பு என்பதால் பின்னூட்டமிடாமலும்
    இருக்க முடியவில்லை
    அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  10. நன்றாக இருக்கிறது! எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும்.

    ReplyDelete
  11. இருக்கிற பணத்துல இன்னும்
    ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்


    இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
    _______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி

    ---------------------------------
    இந்த நண்பர்களெல்லாம் என் blagக்கும்
    வந்து போகணும்- rajeshnedveera
    maayaulgam-4u.blogspot

    ReplyDelete
  12. நிறைய மகிழ்ச்சி..!! மனதில் ஒரு அளவில்லா சந்தோஷம். உங்கள் கவிதைகளை வாசித்தால் நேரம் போவதே தெரிவதில்லை.. !! அத்தனை ஆழம்..!! அறிவுப்பூர்வமான கவிதைகளை அள்ளி வழங்கியிருக்கீறீர்கள். அற்புதம் பிரபு..!! கி.பி. பிரவு என்று சொல்லவேண்டாம். இனி கவிதை பிரபு என்றே சொல்ல்லாம்.!!

    ReplyDelete
  13. அன்பின் பிரபு

    கவலை இன்றி இருப்பதென்பது இயலாது எனக் கடைசி வரியில் நச்சென்று சொல்லியாயிற்றா ? பலே பலே - தமிழ் மாதம் ஒன்றில் 32 நாட்கள் உண்டு பிரபு - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete