Pages

Tuesday, August 16, 2011

இந்தச் சுதந்திரம் இனிப்பாய் இல்லை

கண்ணாடி அணிந்த மனிதர்
காலாற நடக்க ஆரம்பித்தார்
கையில் ஒரு தடி- அங்கத்தில்
உடை ஒரு அடி
ஆம் மகான் காந்தி
          மகாத்மா காந்தி
மறுபடி வந்தார் இங்கு - ஒரு
கையில் மிட்டாய் பையுடன்
மறு கையில் தேசியக் கொடியுடன்
சுதந்திர தினத்துக்கு ............

முதலில் கண்டது
முதுகு முழுவதும் பையுடன்
ஒரு சிறுவன்
who are you old man?
என்றான் தலை நிமிர்ந்து - நான்
காந்தி என்றார் தலை குனிந்து

what is the matter?
why you giving chocolates?
இது சிறுவன்
சுதந்திர தினமின்று - இது காந்தி
Last year we celebrated it on August 13
Why Now August 15th?
அதிர்ந்தார் மகான்

அடுத்தபடியாய் காந்தி கண்டது
நாட்டின் "குடிமகனை"
யார் நீ என்றதற்கு 
தேசத்தின் தந்தை என்றார்
தேசம் ஆணா ? பெண்ணா?
தெளிவாய் கேட்டான் குடிமகன்
கூடவே தேசியக்கொடி கண்டு
எந்தக் கட்சி நீ?
என்பதையும் சேர்த்து
அதிர்ந்து போன காந்தி
தேசியக்கொடியப்பா என்றார்.

ஆமா கையிலென்ன புட்டி
விளக்குக்கு எண்ணெயா ?
யோவ் விளக்கெண்ணெய்
இது எனக்கு எண்ணெய்
அப்படியென்றால் ?- காந்தியிது
பீர்... ம்..... சரக்கு... ஆங் .. மது
அப்போ மதுவிலக்கு ? இதுவும் காந்தி
உம்ம மரணத்தோடவே
அத விலக்கியாச்சு
என்றபடியே எடுத்தான் வாந்தி

அயர்ந்து போன காந்தி
மீண்டு நடக்கலானார்
இந்த முறை கண்டது
வெள்ளுடுப்பு அரசியல்வாதி
குடியரசு தின வாழ்த்துகள் கூறி
லட்டு நீட்டினார்
குற்றுயிரானார் காந்தி

கொளுத்தும் வெயிலில்
கொஞ்சம் அமர இடம்தேடி
அவரது சிலைக்கடியில்
செருப்பு தைக்கும் புனிதன்
அருகில் அமர்ந்து
நாட்டுநடப்பைக் கேட்டார் ...

ஆண்டுக்கு ஐந்து திட்டம்
அதில் ஆயிரம் ஊழல்
இன்றைய அரசியல்வாதி !

குண்டுவெடிப்புக்கு வருந்தாதவன்
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு
அழுகின்றான் - இன்றைய இளைஞன் !

20 வயது கற்ப்பழிப்புக்கு
60 வயதில் தீர்ப்புக்கு காத்திருக்கிறான்
இன்றைய இந்தியன்!

முன்னால் சிரிக்கிறான்
முதுகில் குத்துகிறான்
வெளிநாட்டுத் தலைவராம்!

எல்லோரும் வாழ்வது
உமக்காக காந்தி
நீ சிரிக்கும்
நோட்டுக்காக !

முடித்த போது,
தேசியக்கொடி குத்திய
குழந்தையொன்று
மிட்டாய் கொடுத்தது மகானுக்கு
வாயில் போட்ட மிட்டாய்
இனிக்கவே இல்லை
நாம் உணராத
சுதந்திரம் போல

8 comments:

  1. அருமை அருமை
    உண்மையில் காந்தி வந்திருந்தால்
    இதற்குத்தானா போராடிச் சுதந்திரம் பெற்றேன்
    என தன்னைத்தானே நொந்து நூலாகிப் போயிருப்பார்
    அருமையான கற்பனை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எல்லோரும் வாழ்வது
    உமக்காக காந்தி
    நீ சிரிக்கும்
    நோட்டுக்காக !

    காந்திகணக்கு!

    ReplyDelete
  3. உண்மையில் வெக்க கேடான விசயம்... பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. இப்பொழுது தான் படிக்க நேர்ந்தது. அருமை நண்பா!

    ReplyDelete
  5. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    ReplyDelete
  6. எல்லோரும் வாழ்வது
    உமக்காக காந்தி
    நீ சிரிக்கும்
    நோட்டுக்காக !

    உண்மைதான் சகோ எல்லோரும் வாழ்வது இன்று இதற்காகத்தான் .மிக அருமையாக நாட்டு நடப்பை அழகிய கவிதைவரிகளில் தந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .என் தளத்திற்கும் வாருங்கள் .

    ReplyDelete
  7. ///இந்த முறை கண்டது
    வெள்ளுடுப்பு அரசியல்வாதி
    குடியரசு தின வாழ்த்துகள் கூறி
    லட்டு நீட்டினார்
    குற்றுயிரானார் காந்தி///

    சும்மா பிண்ணி எடுக்கிறீங்க.. !! ரோஷமுள்ள இந்தியவன் எவனுக்கும் உணர்வுகள் பொங்கும்..!! உங்கள் கவிதை கண்டு நான் மெய்சிலிர்க்கிறேன். வார்த்தைகளின் ஜாலம் கவிதையில் நெற்றியடியாய் தெரிக்கிறது..!! உமக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.!!

    ReplyDelete
  8. அன்பின் பிரபு

    காந்தி வாழ்ந்த காலம் - சுதந்திரம் வேண்டிய காலம். - மகாத்மா முன்னின்று - வாங்கிக் கொடுத்தார். ஆனால் இன்று காலம் மாறி விட்டது. இன்றும் நாம் விடுதலை பெற வேண்டும். மகாத்மா மறுபிறப்பு எடுத்து வர வேண்டும். சுதந்திரம் பெற வேண்டும். வாயில் போட்ட இனிப்பு இனிக்க வேண்டும். நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete