Pages

Friday, March 2, 2012

காதலாய் இருப்போம்



நான் உனக்கானவன்
நீ எனக்காகவே ஆனவள் 

♥♥♥

இன்று காதலிப்போம் 
நாளை காதலாய் இருப்போம்

♥♥♥ 

முடிந்த பின்தான்
தொடங்குகிறது காதல் 

♥♥♥

நீ இருக்கும் நேரத்தில் 
உன்னை நினைக்கிறேன் 
நீ இல்லாத நேரத்தில் 
உன்னை மட்டுமே நினைக்கிறேன்

♥♥♥

நீ இல்லாத நான்
நானே இல்லாத நான்

♥♥♥

எப்போது என்னை வெறுப்பாய்
என்றாள்
நீ இறந்த பின்
என்னை விட்டு சென்றதற்காக
என்றேன்

♥♥♥


7 comments:

  1. //எப்போது என்னை வெறுப்பாய்
    என்றாள்
    நீ இறந்த பின்
    என்னை விட்டு சென்றதற்காக
    என்றேன்//ம்ம் அருமை உள் மனதை உரசி விட்டது

    ReplyDelete
  2. It is not write with the pen....came from the deep of the heart.....veryyyyyyyyyyyy nice.

    ReplyDelete
  3. உங்கள் பேனா மையின் துளிகளில்
    காதலின் ஆழம் புரிகிறது!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காதலாய் இருப்போம்
    கவிதை அருமைங்க!

    ReplyDelete
  5. உங்கள் கவிதைகள் அனைத்தையும் படித்தேன். அருமை...தொடருங்கள்

    ReplyDelete
  6. நண்பர் பிரபு வணக்கம்! google adsense தமிழ் தளங்களில் வைத்தால் தெரிவதில்லை. ஆனால் ஒரு சில தமிழ் தளங்களில் தெரிகிறது. நம் கற்போம் தளத்தில் தெரிகிறது. அது எப்படி! நான் google adsense வாங்கி ஒரு வருடம் ஆகிறது. பயன்படுத்த முடியவில்லை. சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.

    ReplyDelete
  7. கவிதை அழகு...

    ReplyDelete