உலகில் எல்லோரும்
நல்லவர்களான நாளில்
நான் மட்டும் தனியே
நடக்கிறேன் சாலையில்
ஆளே இல்லாத
சாலையில் எரிந்த
சிவப்பு விளக்கு
அணையக் காத்திருக்கிறது
அந்த கார்
நூறு மீட்டருக்கு
ஒரு குப்பைத் தொட்டி
ஐநூறு மீட்டருக்கு
ஒரு கழிவறையென
தந்திருந்தது அரசு
தூரத்தில் கும்பல்
அருகில் சென்றேன்
விபத்தில் காயமுற்ற
மனிதரைக் காப்பாற்ற
நான் நீயென போட்டி
அப்போதுதான் கவனித்தேன்
காலுக்கடியில் ஒரு பர்ஸ்
காயமடைந்த மனிதனின்
பணமாய் இருக்கலாம்
எடுத்து அதை
மெல்ல மறைக்கிறேன்
உலகில் எல்லோரும் நல்லவரானால் இப்படித்தான் நினைக்க தோன்றுமோ?
ReplyDelete