Pages

Wednesday, September 12, 2012

தீராக் காதல்

01

அவிழ்த்துப்போட்ட ஆடைகளும்
சேர்ந்து கிடக்க
ஏற்ற, இறக்கங்கள்
எல்லாம் முடிந்த வேளையில்
மறுபடியும் தொடங்குகிறது
ஒரு யுத்தம்

02

காதுகளுக்குள் புகுந்து
கேட்கிறேன்
எப்போது முடியும்?
எப்போதாவது.....
இப்போதல்ல
என்று சொன்னது
உன் மனம்

03

மிதவேகம்
வேகம்
அதிவேகம்

04

ஈர உடல்களில்
இனிப்பெதுவும் இல்லை
இருப்பினும் சுவைக்கிறோம்
இனிக்க இனிக்க

05

பேசாதே என்றாய்
பேசவில்லை என்று
சொல்லவில்லை நான்

06

பற்றிய நெருப்பில்
ஊற்றிய தண்ணீர்
கொழுந்து விட்டு
எரிய உதவுகிறது

07

கால்களில் ஆரம்பித்து
கால்களில் முடித்தேன்

08

என் முடிவில்
தொடங்குகிறது
உன் ஆரம்பம்

09

நிறுத்திவிட வேண்டாமென
உளறுகிறாய்
நிறுத்திவிட வேண்டுமென
நான் யோசிக்கவே இல்லை

10

முடிந்த மூன்றாம் நிமிடம்
மெல்ல சிரிக்கிறாய்
அர்த்தம் புரிந்தது


 - பிரபு கிருஷ்ணா

7 comments:

  1. நல்லா இருக்கு பாஸ் ...தொடர்ந்து உறவாட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வஞ்சப்ப்புகழ்ச்சி கவிதை . அருமை

    ReplyDelete
  3. A கவித! ;) ஒரு கவிதை என்றும் அர்த்தம் கொள்ளலாம்! :D

    ReplyDelete
    Replies
    1. அ.ஆ கவிதை என்றும் வைத்துக்கொள்ளலாம்! :D

      Delete
  4. காதல் கவிதைகள் அருமை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html



    ReplyDelete
  5. இன்னொரு தபு சங்கர் உதயமாகிறார்!

    ReplyDelete