Pages

Tuesday, February 1, 2011

மறுஅங்கீகாரம்- நன்றி அதீதம்

வணக்கம் நண்பர்களே. என்னுடைய கவிதை ஒன்று நமது "அதீதம்" இணைய இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. கடந்த 6  வருடங்களாக கவிதை எழுதுகிறேன். சில முறை தினகரனிலும், ஒரு முறை தினத்தந்தி "மாணவர் மலரிலும் " என் கவிதை வந்து உள்ளது. பின்னர் எந்த பத்திரிக்கைக்கும் நான் கவிதை எழுதி அனுப்பவில்லை. இப்போது தான் அனுப்பினேன்.கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. அதீதம் இணைய இதழுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

இந்த வெற்றிக்கு காரணமான, என்னை கவிஞன் ஆக்கிய என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.

"அய்யா கவிதைகள் எத்தனை 
நான் எழுதினாலும்-அத்தனையும்
உங்கள் காலடியில் சமர்ப்பணம்"



உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிச் செல்லவும்.