வணக்கம் நண்பர்களே. என்னுடைய கவிதை ஒன்று நமது "அதீதம்" இணைய இதழில் பிரசுரம் ஆகி உள்ளது. கடந்த 6 வருடங்களாக கவிதை எழுதுகிறேன். சில முறை தினகரனிலும், ஒரு முறை தினத்தந்தி "மாணவர் மலரிலும் " என் கவிதை வந்து உள்ளது. பின்னர் எந்த பத்திரிக்கைக்கும் நான் கவிதை எழுதி அனுப்பவில்லை. இப்போது தான் அனுப்பினேன்.கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. அதீதம் இணைய இதழுக்கு என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.
இந்த வெற்றிக்கு காரணமான, என்னை கவிஞன் ஆக்கிய என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.
"அய்யா கவிதைகள் எத்தனை
நான் எழுதினாலும்-அத்தனையும்
உங்கள் காலடியில் சமர்ப்பணம்"
கவிதை படிக்க: அறுநூறு ரூபாய் - பிரபு கிருஷ்ணா
உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிச் செல்லவும்.
எல்லாருக்குமே தமிழாசிரியர்கள் மறக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபு,
ReplyDeleteஇன்னும் பல கவிதை படைப்புகளை எழுதி மென்மேலும் சிறக்க வேண்டும்...
//இந்த வெற்றிக்கு காரணமான, என்னை கவிஞன் ஆக்கிய என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்.//
ReplyDeleteநம்மில் அனைவருக்குமே தமிழாசிரியர்தான் முதல் காரணமாக இருப்பார் அய்யாவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
நாய்க்கு நாலாயிரம்..
ReplyDeleteஅழகுக்கு ஆறாயிரம்..
சினிமாவுக்கு சில ஆயிரம்..
புகைப்பதற்கு ஓராயிரம்..
சேமிப்பு பல ஆயிரம்..
வெட்டிச்செலவு மூன்றாயிரம்..
வேண்டிய செலவு ஒன்பதாயிரம்..
பெற்று வளர்த்து,
பேணிப் பாதுகாத்த
தாய்க்கு..
போனால் போகட்டும்
அறுநூறு ரூபாய்.!
கடந்த 6 வருடங்களாக கவிதை எழுதுகிறேன். சில முறை தினகரனிலும், ஒரு முறை தினத்தந்தி "மாணவர் மலரிலும் " என் கவிதை வந்து உள்ளது. பின்னர் எந்த பத்திரிக்கைக்கும் நான் கவிதை எழுதி அனுப்பவில்லை. இப்போது தான் அனுப்பினேன்.கிட்டதட்ட 5 வருடங்கள் கழித்து ஒரு அங்கீகாரம் கிடைத்து
கவிதை அருமை...உங்கள் வெற்றிக்கும் எனது .வாழ்த்துக்கள் நண்பா
பிரபு கவிதையிலும் தூள் கிலப்புரீங்க. நா இன்னிக்குதான் இந்தபக்கம் வந்தேன்.னல்ல இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDelete@Philosophy Prabhakaran
ReplyDelete@மாணவன்
@ரேவா
@Lakshmi
வாழ்த்திய உள்ளங்களுக்கு மிக்க நன்றி!!!
http://pazasu.atheetham.com/feb1/kavithai3.html
ReplyDeleteஉங்களின் கவிதை இந்த இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கிறது. சுட்டியை சரி பார்க்கவும். அதீதம் தங்களிடம் இருந்து தொடர்ந்து படைப்புகளை எதிர் பார்க்கிறது.
நன்றி
வாமனன்
அதீதம்
அன்பின் பிரபு - மாற்றப்பட்ட சுட்டியினை பதிவில் மாற்றுக - தேடிக் கண்டு பிடித்துத் தந்திருக்கிறேன். http://pazasu.atheetham.com/feb1/kavithai3.html
ReplyDeleteபல்வேறு இதழ்களில் கவிதை வெளி வந்தமைக்கு பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற வாக்கினை வேத வாக்காக எடுத்து ஆசிரியப் பணி புரியும் ஆசிரியர்க்ளை நினைவு கூர்ந்தமை நன்று பிரபு.
கவிதை அருமை - சிந்தனை செல்லும் திசை நல்ல திசை. பெற்றவர்களுக்கொ உறவினர்களுக்கோ கொடுப்பதற்கு மனது இடம் கொடுக்க மறுக்கிறதே ! என்ன செய்வது - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.