Pages

Wednesday, January 26, 2011

நெஞ்சம் பொறுக்குதில்லையே!!



நெஞ்சம் பொறுக்குதில்லையே

வணக்கம் நண்பர்களே இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

இந்த கவிதை நான் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் போது(10.08.2005 அன்று) 16 வயதில்  சுதந்திர தினத்துக்கு எழுதி முதல் பரிசு பெற்றது.


"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரின் நிலை கண்டு " என்பதன் ஈர்ப்பில் எழுதியது. எந்த மாற்றமும் செய்யாமல் இப்போது.



நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
அரசியல் எனும் பெயரில்
அதை வியாபாரமாக்கி
மக்களை ஏமாற்றும் சில
கயவர் எண்ணம் கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
பாலூட்டி சோறூட்டிய
அன்னைக்கு இறுதியில்
பால் ஊற்ற நினையாத
சிலர் துரோகம் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
குருதட்சணை கொடுக்க வழியின்றி
படித்த பெண்ணிடம்
வரதட்சணை கோரும்
சில கயவர் நிலையால்,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
 ஆன்மீகம் என்று சொல்லி
அதை தொடராமல்
மக்களை ஏமாற்றும்
சிலர் மனம் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
தன்மகன் பாஸ்மார்க்கா என்று
அறியாமல், விடிந்தவுடன்
டாஸ்மாக்கில் இருக்கும்
குடிமகன் கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
ஊதியம் வாங்கும் கணவனை
ஊக்கம் செய்யாமல்
அழகுக்கும் ஆடம்பரத்துக்கும்
ஆசை கொள்ளும் சில
மாதர் மடமை கண்டு,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இன்றைய இளைஞர் பலர்
இலட்சியம் எண்ணாமல்
சினிமா நடிகைகளை
எண்ணும் எண்ணத்தால்,
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
இன்றைய மாணவர் சிலர்
கல்வியை நினையாமல்
கலவியை நினையும்
நிலை கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

நெஞ்சம் பொறுக்குதில்லையே
நெஞ்சம் பொறுக்குதில்லையே
அன்னை நாட்டை நினையாமல்
அண்டை நாட்டு மோகம்
கொண்ட நம்
அன்பர் சிலர் நிலை கண்டு
நெஞ்சம் பொறுக்குதில்லையே!

                                                                                   _கி.பி

9 comments:

  1. //நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    அன்னை நாட்டை நினையாமல்
    அண்டை நாட்டு மோகம்
    கொண்ட நம்
    அன்பர் சிலர் நிலை கண்டு
    நெஞ்சம் பொறுக்குதில்லையே//

    வந்தேமாதரம்

    ReplyDelete
  2. நெஞ்சம் பொறுக்குதில்லையே
    நெஞ்சம் பொறுக்குதில்லையே
    இன்றைய மாணவர் சிலர்
    கல்வியை நினையாமல்
    கலவியை நினையும்
    நிலை கண்டு
    நெஞ்சம் பொறுக்குதில்லையே!
    இந்த நிலை கெட்ட மனிதனை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே..
    வாழ்த்துக்கள்... நண்பரே...

    ReplyDelete
  3. ஓ இது உங்களோட வேலைதானா?
    கவிதை சூப்பரா இருந்துச்சு!
    அடுக்கு மொழியில அடுக்கீட்டீங்க!

    நம்ம கடையில இன்னிக்கு பால் விக்கிறோம்! பாக்கெட் ரெண்டு ரூபா! வந்து வாங்கிட்டு போங்க பாஸ்!

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரிகளும் அனல் வீசுகிறது பிரபு

    உணர்வுகள் கலந்த வலிகளுடன் வரிகள் பேசுகின்றன...

    வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  5. @MANO நாஞ்சில் மனோ

    @ரேவா

    @மாத்தி யோசி

    @மாணவன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. ஒவ்வொரு வரிகளும் அருமை பிரபு....

    ReplyDelete
  7. உங்கள் ஆதங்கம் புரிகிறது... இயலாமைக்கு வருந்துகிறேன்...

    ReplyDelete
  8. ஒன்னொரு வரியும் தீபொறியாய் அமைந்துள்ளது
    (தலைப்பை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். நம்ம ப்ளாக் பத்தி தான் கம்ளைன்ட் பண்ணிட்டு இருக்காங்களோன்னு;)

    ReplyDelete
  9. அன்பின் பிரபு - சுதந்திர தினக் கவிதை அருமை - 16 வயதில் கவிதை எழுதி - முதல் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ...... என்ன செய்வது ........ சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete