Pages

Sunday, February 6, 2011

♥♥♥காதலோ காதல்♥♥♥



காதல் மாதத்தில் கவிதை என்பதில் " காதல் என்பது".
(எழுதாவிட்டால் கவிஞன் இல்லையோ) 
   தனித்தனியாய் அணியணியாய் 
கவிதைகள் இங்கே !!!


மன்னிச்சுடுங்க....♥
மன்னிச்சுடுப்பா...♥
மன்னிச்சுடுடா....♥
....................
வளர்கிறது
நம் காதல்
உன் வார்த்தைகளில்♥


உச்சரிக்கத் தெரியாத
உன் வார்த்தைகளில்
"அலகு"ம், "அளகு"ம்
கூட,
"அழகு" தான்♥♥♥


யாராவது பாத்துட போறாங்க
என கூறிக்கொண்டே
என் கைகளை
இறுக்கிப் பிடித்த
உன் கைகளுக்குள்
பதறுகிறது என் மனம்♥♥♥

எத்தனை எழுதியபோதும்
எல்லாம்
ஆரம்பமாகவே!!
உன்னைப் பற்றி
என்பதால்♥♥♥ 



முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥


நீ ஆறுதல்
சொல்வதாலேயே
அடிக்கடி விழுகிறேன்
எங்கிருந்தாவது♥♥♥


தவிப்புகளை எல்லாம்
தவிர்த்து விட்டு
பேசச் சொன்ன
அந்த நொடியில்
கேட்கிறேன்,
எனக்கே கூட
கேட்காமல்
நிலவு நீயா♥♥♥



எத்தனை எழுத்துக்களில்
கவிதை கேட்டபோதும்,
உன் பெயரையே
எழுதினேன்!!
எழுத்துக்களை எண்ணாமல்
உன்னை எண்ணியதால்♥♥♥ 



இது கவிதையா??, ஜோக்கா??, கடியா??

ஊடல் கொஞ்சம் உள்ள  காதலில்


காதலி: என்மீது உன் காதல் எவ்வளவு?
காதலன்: வானம் அளவு!
காதலி: இது எல்லாரும் சொல்றது!
காதலன்:கடலின் ஆழம்!
காதலி: இத யார்தான் சொல்லல?
காதலன்: பூமி அளவு
காதலி: ச்சச்ச
.
.
.
.
.
காதலன்:ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு!!
காதலி: அய்யோ ஐ லவ் யூ டா♥♥♥


--
♥♥♥கி.பி♥♥♥

6 comments:

  1. //உச்சரிக்கத் தெரியாத
    உன் வார்த்தைகளில்
    "அலகு"ம், "அளகு"ம்
    கூட,
    "அழகு" தான்♥♥♥///


    அருமை அருமை மக்கா.....................

    ReplyDelete
  2. கவிதைகள் அலகு... ச்சே அளகு.... ச்சே ச்சே ஆழகு...

    ReplyDelete
  3. தவிப்புகளை எல்லாம்
    தவிர்த்து விட்டு
    பேசச் சொன்ன
    அந்த நொடியில்
    கேட்கிறேன்,
    எனக்கே கூட
    கேட்காமல்
    நிலவு நீயா♥♥♥

    கவிதை அழகு

    ReplyDelete
  4. நீ ஆறுதல்
    சொல்வதாலேயே
    அடிக்கடி விழுகிறேன்
    எங்கிருந்தாவது♥♥♥

    கலக்கல் சிதறல்!!!

    ReplyDelete
  5. அன்பின் பிரபு - அத்தனையும் அழகு - அலகொ அளகோ அல்ல - நாகுல வசம்ப வச்சித் தேய்க்கணும்பா - நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete