Pages

Showing posts with label சில வரிகளில். Show all posts
Showing posts with label சில வரிகளில். Show all posts

Monday, November 7, 2011

என் காதல் ஸ்டேட்டஸ்

Facebook, Twitter, Buzz, & My Gmail Status. போன்றவற்றில் பகிர்ந்த காதல் பற்றிய பகிர்வுகள். 

இவை எல்லாம் கவிதையா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வேன்.


  • இல்லாததை சொல்லிச் சொல்லி உன்னை வர்ணித்து இருப்பவை எல்லாம் சண்டையிடுகின்றன நீயாய் இருக்க..

  • ஒரு வார்த்தையில் கவிதை கேட்டாள் நீ என்றேன், பொய் என்றாள்; நான் என்றேன், அய் என்றாள்; நாம் என்றேன், மெய் என்றாள்!

  • சிலருக்கு உன்னைப் பிடிக்கும்; சிலருக்கு உன்னையும் பிடிக்கும்; எனக்கு உன்னை மட்டுமே பிடிக்கும். ! 

  • என்னை போன்ற பெண்களை பார்த்தால் என்ன செய்வாய் என்று கேட்டாள், கண்ணாடி இல்லாவிட்டால் நீயென் நினைவில், இருந்தால் உன் தங்கை என்றேன் !! ச்சீ போடா என்றாள் !! # டபுள் டமாக்கா

  • என்னைக் கேட்டுதான் எல்லாம் சொல்வேன் என்றாள். யாரைக் கேட்டுச் சொன்னாள், என்னைப் பிடிக்காதென?

  • கனவில் கூட உன்னைப் பிரிய விரும்பவில்லை...... அதனால்தானோ கனவில் மட்டுமே நீ என்னுடன்.

  • நீ வந்தவுடன் உன்னுடன் பேசுகிறேன். நீ வரும்முன் நம்முடன் பேசினேன்.

  • உன் புரிதலுக்காகவே என் கவிதைகள்... ஆனால் உன்னைத் தவிர அனைவருக்கும் புரிகிறது.

  • அவ்வப்போது கொஞ்சம் சிரி. என் ஆயுள் வளர.

  • நீ வரும் வரை பூமிக்கு நிலவொளி, நீ வந்த உடன் நிலவுக்கு நீ தான் ஒளி

  • சில அழகான கவிதைகளை இன்னும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. உன்னையும் சேர்த்துதான்.

  • எவ்வளவு காதலிக்கிறாய் என்றாள், கன்னத்தில் கொடுத்தேன் முத்தம். இவ்வளவுதான் காதலிக்கிறாயா என்கிறாள்!

  • ஒரே காதல் தான் உனக்கு தென்றலாகவும், எனக்கு புயலாகவும். முடிவில் நீ சிரித்திருக்கிறாய், நான் சிதைந்திருக்கிறேன்.

  • யாருக்கு உன் கவிதைகள் என கேள்விகள் நிறைய. காதலி(க்க) தெரிந்திருந்தால் காதலித்து இருப்பேனே? தெரியாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

    Friday, September 30, 2011

    புரிந்தது !

    மாடர்ன் கவிதையென்றால் -எளிதில்
    எவர்க்கும் புரியக்கூடாதாம்
    எழுதிவிட்டுப் பார்த்தேன்
    எனக்கே புரியவில்லை!

    Thursday, September 22, 2011

    நானும் இந்தியன்தானே !!


    எல்லோரும் அண்ணாவை ஆதரித்தார்கள் 
    நானும் ஆதரித்தேன்! 
    எல்லோரும் அணு உலையை எதிர்க்கிறார்கள் 
    நானும் எதிர்க்கிறேன் ! 
    எல்லோருக்கும் மங்காத்தா சூப்பர் 
    எனக்கும் சூப்பர் ! 
    எல்லோரும் தூக்கு வேணாம்னாங்க 
    நானும் வேணாம்னேன் ! 
    எல்லோரும் சும்மா இருக்க 
    நானும் சும்மா இருக்கேன் ! 
     ஏன் என்ற கேள்வி 
    எல்லாம் கிடையாது
    என்ன செய்ய 
    நானும் இந்தியன்தானே !!

    Tuesday, December 14, 2010

    சில வரிகளில் !!!!!!!

    எந்த பூச்சிக் கொல்லி மருந்துகளும்
    சரியான  விலைக்கு விற்கப்படுவதில்லை
    பெப்சி, கோக்கும் சேர்த்துதான்!!
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    பேருந்துப் பயணியாய்- நீ
    பாதசாரியாய் நான்
    பயணச்சீட்டாய்
    நம் காதல்!!!
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    இரவை பகலாக்கும்
    அந்த மேடையிலே,
    மின்சாரத் துறை அமைச்சர்
    முழங்குகிறார், 
    "மின்சாரத்தை சிக்கனமாய்
    பயன்படுத்தினால்தான்
    இங்கு இருக்காது
    மின்சாரத் துண்டிப்பு!!"
    ----------------------------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                                     _கி.பி