Facebook, Twitter, Buzz, & My Gmail Status. போன்றவற்றில் பகிர்ந்த காதல் பற்றிய பகிர்வுகள்.
இவை எல்லாம் கவிதையா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வேன்.
- இல்லாததை சொல்லிச் சொல்லி உன்னை வர்ணித்து இருப்பவை எல்லாம் சண்டையிடுகின்றன நீயாய் இருக்க..
- ஒரு வார்த்தையில் கவிதை கேட்டாள் நீ என்றேன், பொய் என்றாள்; நான் என்றேன், அய் என்றாள்; நாம் என்றேன், மெய் என்றாள்!
- சிலருக்கு உன்னைப் பிடிக்கும்; சிலருக்கு உன்னையும் பிடிக்கும்; எனக்கு உன்னை மட்டுமே பிடிக்கும். !
- என்னை போன்ற பெண்களை பார்த்தால் என்ன செய்வாய் என்று கேட்டாள், கண்ணாடி இல்லாவிட்டால் நீயென் நினைவில், இருந்தால் உன் தங்கை என்றேன் !! ச்சீ போடா என்றாள் !! # டபுள் டமாக்கா
- என்னைக் கேட்டுதான் எல்லாம் சொல்வேன் என்றாள். யாரைக் கேட்டுச் சொன்னாள், என்னைப் பிடிக்காதென?
- கனவில் கூட உன்னைப் பிரிய விரும்பவில்லை...... அதனால்தானோ கனவில் மட்டுமே நீ என்னுடன்.
- நீ வந்தவுடன் உன்னுடன் பேசுகிறேன். நீ வரும்முன் நம்முடன் பேசினேன்.
- உன் புரிதலுக்காகவே என் கவிதைகள்... ஆனால் உன்னைத் தவிர அனைவருக்கும் புரிகிறது.
- அவ்வப்போது கொஞ்சம் சிரி. என் ஆயுள் வளர.
- நீ வரும் வரை பூமிக்கு நிலவொளி, நீ வந்த உடன் நிலவுக்கு நீ தான் ஒளி
- சில அழகான கவிதைகளை இன்னும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. உன்னையும் சேர்த்துதான்.
- எவ்வளவு காதலிக்கிறாய் என்றாள், கன்னத்தில் கொடுத்தேன் முத்தம். இவ்வளவுதான் காதலிக்கிறாயா என்கிறாள்!
- ஒரே காதல் தான் உனக்கு தென்றலாகவும், எனக்கு புயலாகவும். முடிவில் நீ சிரித்திருக்கிறாய், நான் சிதைந்திருக்கிறேன்.
- யாருக்கு உன் கவிதைகள் என கேள்விகள் நிறைய. காதலி(க்க) தெரிந்திருந்தால் காதலித்து இருப்பேனே? தெரியாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மாட்டிக்கிட்டியே மக்கா...
ReplyDeleteவணக்கம் மச்சி,
ReplyDeleteநலமா?
காதல் ஸ்டேட்டஸ்கள் ஒவ்வொன்றும் நறுக்குகளாக இருக்கின்றன.
அருமையான கவிதைகள்.
கவிதை தொழில்நுட்பமா? பலே.. பலே..!!
ReplyDeleteஅன்பின் பிரபு - காதல் ஸ்டேடஸ் அருமை - ஆமாம் - எப்பொழுது காதல் முடிந்து கல்யாணம் ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசூப்பர் சார்.... நீங்க கவிதை எழுத அரம்பிஞ்சிட்டிங்களோ .... இல்லையோ.. ஆன...... காதலிக்க ஆரம்பிஞ்சிட்டிங்கன்னு நெனெக்கிறேன்.....ரிஷ்வன்.
ReplyDeleteசிலருக்கு உன்னைப் பிடிக்கும்; சிலருக்கு உன்னையும் பிடிக்கும்; எனக்கு உன்னை மட்டுமே பிடிக்கும். !
ReplyDeleteசில அழகான கவிதைகளை இன்னும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. உன்னையும் சேர்த்துதான்.
அழகான குட்டி குட்டி கவிதைகள்!
:-).. romba nalla irukku prabhu.. valthukkal..
ReplyDelete