Pages

Wednesday, December 8, 2010

கிராமம்

 எங்கும் பசுமை தெறிக்க
விளைந்த நெற்கள்
தலைகுனிந்து நிற்க ,
தளராமல் நடக்கும்
முதியவரும்,
தடங்கலின்றி பாயும்
நீரும்,
தாவி ஓடும்
ஆடும், மாடும்
அடையாளமாம் கிராமத்திற்கு!!!
காணவில்லை அடையாளத்தை
ஆடும்,மாடும்
ஓடிய இடம்
அடுக்கு மாடிகளாகவும்!
இயற்கையாய் சிரித்த பசுமை
செயற்கையாய் தொட்டிகளிலும்!
முதியவர்கள் நடப்பதே இல்லை!
முதிர்ந்த போது யாரும் உயிருடன் இல்லை!
தவிக்கிறது எனது மனம்!
சிரிக்கிறது இந்த உலகம்
பிற்போக்குவாதி நான்
என்று!!
                                                                                                 _ கி.பி

1 comment:

  1. காலத்தின் கட்டாயம் - இயற்கைக்கு எதிராகச் செயல் படுகிறோம். எவ்வளவு நாள் தாங்கும் ?? ம்ம்ம்

    ReplyDelete