விழிகளில் வழியும்
நீரை துடைத்துதான்
பார்க்கிறேன்,
நீரோடை போன்று வரும்
கண்ணீரை
நிறுத்த முடியவில்லை.
ஏன் அழுகிறேன் நான்?
ஏழைத் தாயை நினைத்தா?
ஏதும் செய்ய இயலாத தந்தையை நினைத்தா
தனக்கென வேலை ஏதும் இல்லாத
தனயனை நினைத்தா?
அன்பு இல்லாத
உறவுகளை நினைத்தா?
அரவணைக்காத உலகை நினைத்தா?
இல்லை,
முப்பத்து மூன்று வயதாகியும்
திருமணம் ஆகாத
என்னை நினைத்தா?
யாரை நினைத்து
நான் அழுகிறேன் ?
ம்ம்ம் - முதிர் கன்னிகள் நிலைமை - இன்னும் இப்படித்தான் தொடர்கிறது ......
ReplyDelete