Pages

Sunday, December 4, 2011

அர்த்தம்

தெருவில் கிடக்கும் 
குடிக்காரனைத் திட்டிவிட்டு
குப்பையை அருகில் 
கொட்டிச் சென்றால்,
இந்த சமுதாயத்தின் 
மேலுனக்கு அக்கறை
என்று அர்த்தம்.

சாலையில் அடிபட்டு 
சாகக் கிடக்கும் 
முதியவரைப் பார்த்து 
"ச்சச்சோ" என்றால்,
நீ இரக்கமுள்ளவன்
என்று அர்த்தம்.

நடிகையின் மார்பை
நன்றாய் காட்டிவிட்டு 
ரசிகனின் பார்வையில் 
தவறென்று சொன்னால்,
நீ கலைஞன் 
என்று அர்த்தம்.



1 comment:

  1. இப்போ என்ன தம்பி சொல்ல வர்றே புரியலையே ஹி ஹி...!!!

    ReplyDelete