Pages

Friday, December 16, 2011

அது இது எது - 03

09

இன்னும் தூங்கலியா?
தூங்காத அம்மாவின்
கேள்வி

---

10

நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
நாளைக்குள்ள இதை முடிக்கணும் 
.
---
11

உரம் போட்டு போட்டு 
பயிர் விளைந்தது 
நிலம் அழிந்தது. 

--

12
கெமிஸ்ட்ரி புக்கில்
மானாட மயிலாட 
சேர்க்காமல் விட்டது 
கலைஞரின் மறதி !

 ---
13

 தாத்தா செத்த பின் 
திண்ணையும் செத்தது 
---
14

எழவுக்கோ தேவைக்கோ 
போகாமல் விட்டால் 
செத்தவனைத் தவிர 
மற்றவன் பேசுவதில்லை

---

15

சத்தியமா சொல்றேன்...
பெரும்பாலான பொய்களின்
தொடக்கம்

2 comments:

  1. கெமிஸ்ட்ரி புக்கில்
    மானாட மயிலாட
    சேர்க்காமல் விட்டது
    கலைஞரின் மறதி !//

    ஹா ஹா ஹா ஹா கொய்யால.....

    ReplyDelete
  2. கமெண்ட்ஸ்ல உள்ள வேர்ட்வேரிபிகேஷனை நீக்கி விடு தம்பி...

    ReplyDelete