Pages

Friday, December 23, 2011

அது இது எது - 04


 016

பாட்டியிடம் ஆசீர்வாதம் 
வாங்கிக்கோ - பையனிடம் 
பையன் சொன்னான் 
நல்லா இரு பாட்டி 

017

 குடி குடியை 
கெடுக்கும் என்றேன் 
அதனாலதான் டைவர்ஸ் 
பண்ணிட்டேன் ஸார்
எதிர்த்த டேபிள்காரன்

018

நாற்காலிக்கு மதிப்பிருந்தால் 
நண்பனும், துரோகி 
ஆகிறான்

019

வீட்டில் பிரச்சினை 
என்றாலும் மன்மோகன்
வெளிநாட்டுக்குதான்

020 

ஃபேர்& லவ்லி போட்டால் 
பாட்டு வரும் ,
விவல் போட்டால் 
பட்டம் வரும் 
புத்திசாலிகளின் புது 
முயற்சி

021 

பத்துக் கிருமிகளினால்
தொல்லையில்லை 
பதினோராவது கிருமி போல 
காலையில் இருந்து
காய்ச்சல் சளி.
022

"பொங்கலோ பொங்கல் 
பொங்கலோ பொங்கல் 
வாய்ப்பூசு கைகழுவு "
சாட்டிலைட் தொலைக்காட்சி 
சட்னி,இட்லியுடன் 
பொங்கல்

023
"2041 இல் நான் 
முதல்வரானால் "
பள்ளிக் கட்டுரையில்  
அரசியல்வாதி மகன் 
024
"பள்ளிக் குழந்தைகளுக்கு 
காலை உணவு"
அரசு ஊட்டிவிடும் !
"புதிய எலைட் 
பார்கள் திறப்பு"
அரசு ஊற்றியும் கொடுக்கும் !!

025

மூணு புள்ளி ...
ஒரு ஆச்சர்யகுறி !
முடிந்தது கவிதை ...!

4 comments:

  1. வீட்டில் பிரச்சினை
    என்றாலும் மன்மோகன்
    வெளிநாட்டுக்குதான்//

    கொய்யால இவன் ஊர் சுத்துறது இவன் அப்பன் வீட்டு பணமா என்ன...?

    ReplyDelete
  2. எல்லாமே சும்மா நச், ஆச்சர்யங்கள், சிரிப்புகள்...!!!

    ReplyDelete
  3. ...!

    o.k கவிதை எழுதியாச்சு !! நல்லா இருக்கானு படிச்சு சொல்லு.


    :))

    ReplyDelete