காடுகளை அழித்த
நகரத்தில் பார்க் !
அருவி இருந்த இடத்தில்
தீம் பார்க் !
ஆறு இருந்த இடத்தில்
சாக்கடை !
மரங்களை வெட்டி
மலர்ந்த வீட்டில்
சீனரி ஓவியம் !
நடக்க முடிகிற இடத்துக்கும்
நான்கு சக்கர வாகனம் !
நேரில் பேசக் கூடிய
தொலைவுக்கும் அலைபேசி
இருப்பதை எல்லாம்
அழித்து விட்டு
உருவானது செயற்கை !
இருந்த இடமே தெரியாமல்
அழித்து விட்டு
உருவாகும் இயற்கை !
உங்கள் பின்னூட்டத்தைப் பின்பற்றி வந்தேன்..
ReplyDeleteமிகமிக அருமையான...செருப்படிக் கவிதை!! சூப்பர்...!!
//இருப்பதை எல்லாம்
அழித்து விட்டு
உருவானது செயற்கை !
இருந்த இடமே தெரியாமல்
அழித்து விட்டு
உருவாகும் இயற்கை !//
இந்த வரிகள் மிகமிக அருமை!
வாழ்த்துக்கள் நண்பரே!