Pages

Thursday, December 15, 2011

அது இது எது - 02

3.

இல்லை என்பவர்களின்
கண்ணில் தெரிகிறது
இருக்கிறது என்ற பதில்

---
4.

செத்துப் போனவன்
கண்ணில் இன்னும்
சாகாத ஆசைகள்

---
5.

நாளை முடிக்க
வேண்டியது
நாளை மறுநாள்
நேற்றாகிவிடும்

---
6.

இணையத்தால் இழந்தது
பக்கத்து வீட்டுக்காரர்களை

---
7.

கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
வேற்றுமையில் ஒற்றுமை
எல்லோருக்குள்ளும்
சண்டை

---
8.

ஆறு மாசத்துக்கு
ஒரு முறை
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்.
அடிக்கடி இருக்கிறாள்
அம்மா

---

4 comments:

  1. எத எடுத்து நல்லா இருக்குனு கமெண்ட் போட.. எல்லாமே நல்லா இருக்கு :))

    6,7,8 ரொம்பவே நல்லா வந்திருக்கு :))

    ReplyDelete
  2. எல்லாமே உண்மைகள் !

    ReplyDelete
  3. இணையத்தால் இழந்தது
    பக்கத்து வீட்டுக்காரர்களை//

    நெருங்கிய நண்பர்களையும்தான், நெருங்கிய நண்பனை விட்டுவிட்டு, தூரத்து நண்பர்களை நேசிப்பது இணையத்தில்...!!!

    ReplyDelete